முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இயல்பு நிலைக்கு திரும்பிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள்!... ஒரே ஆண்டில் 2 முறை முடக்கம்!

07:48 AM Apr 04, 2024 IST | Kokila
Advertisement

Whats app: உலகளாவிய செயலிழப்பிற்குப் பிறகு மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

Advertisement

உலகெங்கிலும் உள்ள பல கோடி கணக்கான மக்களின் தகவல் தொடர்பு சேவையில் முக்கிய பங்கு வகிப்பது வாட்ஸ் ஆப். இதில் குறுந்தகவல்களை அனுப்பும் வசதி, ஆடியோ கால், வீடியோ கால், ஆடியோ மெசேஜ் மட்டும் வீடியோ மெசேஜ் என பலவிதமான சேவைகளையும் வழங்கி வருகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உரையாடல்கள், அலுவலக விஷயங்கள் எனப் பல முக்கியமான தகவல்கள் வாட்ஸ் அப் மூலமாகவே பெருமளவில் நடக்கின்றன.

இதேபோல், அனேக மக்களுக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் என்னும் சிறிய வீடியோக்களை பார்க்கும் பழக்கம் இருந்து வருகிறது. பெரும்பாலும் தூங்குவதற்கு முன்பாக இந்த ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் பலரிடமும் அதிகரித்திருக்கிறது. இந்தநிலையில், நேற்று இரவு உலகம் முழுவதும் திடீரென வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கின.

நேற்று இரவு 11.45 மணியளவில் இரண்டு தளங்களிலும் ஆயிரக்கணக்கான பயனர்கள் சிக்கல்களை சந்தித்தனர். செயலியில், உள்நுழைய முயற்சிக்கும்போது, தற்போது சேவை கிடைக்கவில்லை என்று காட்டியது. இந்த நிலையில் வாட்ஸ் அப் முடங்கியதாக அமெரிக்காவில் சுமார் 12,000 பேர் புகாரளித்துள்ளனர். இந்தியாவில் 20,000-க்கும் மேற்பட்ட பயனர்களும், இங்கிலாந்தில் சுமார் 46,000 பயனர்களும், பிரேசிலில் 42,000-க்கும் மேற்பட்ட பயனர்களும் புகாரளித்துள்ளனர்.

மேலும் இன்ஸ்டாகிராம் முடங்கியதாக அமெரிக்காவில் சுமார் 4,800 பேர் புகாரளித்துள்ளனர். இந்த நிலையில் சில மணிநேரங்களுக்குப் பிறகு வாட்ஸ் அப், ன்ஸ்டாகிராம் செயலிகள் மீண்டும் சரிசெய்யப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பின. மெட்டாவுக்குச் சொந்தமான செயலிகள் முடங்குவது இந்த ஆண்டில் இது இரண்டாவது முறையாகும். கடந்த மார்ச் மாதத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக செயலிழந்தது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.

Readmore: ’கூட்டணியில் சேர பாஜக மிரட்டியது’..!! ’வங்கிக் கணக்குகளை முடக்கியது’..!! பிரேமலதா விஜயகாந்த் நெத்தி அடி..!!

Tags :
இயல்பு நிலைக்கு திரும்பியதுஒரே ஆண்டில் 2 முறை முடக்கம்
Advertisement
Next Article