2 கோடி இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்..!! உங்களுக்கும் இப்படி வருதா..? என்ன காரணம்..?
ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் இரண்டு கோடி இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதத்தில் சுமார் 2 கோடி வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியின் பாதுகாப்பு, பயனர்களின் பாதுகாப்பு, செயலியின் நம்பகத்தன்மை, தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உங்கள் வாட்ஸ் அப் கணக்கு ஒருவேளை முடக்கப்பட்டு இருந்தால், நீங்கள் வாட்ஸ் அப் செயலியை ஓப்பன் செய்ததும் அதில் உங்கள் கணக்கில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது என்ற தகவல் வரும் என்றும் வாட்ஸ் அப் விதிமுறைகளுக்கு மாறாக செயல்படும் கணக்குகளை நீக்கிவிட்டோம் என்றும் விளக்கம் அளித்துள்ளது. ஸ்பேம் , ஸ்கேம் போன்றவற்றில் ஈடுபட்டால் வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read More : நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்..!! குழந்தைகள், முதியவர்கள் உஷார்..!! ஆனால் ஒரு ட்விஸ்ட்..!!