என்ன ஆச்சு!. திடீரென ஓய்வறைக்கு திரும்பிய பும்ரா!. மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிர்வாகிகள்!. ரசிகர்கள் அதிர்ச்சி!.
Bumrah; ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது திடீரென ஓய்வறைக்கு சென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ராவை மருத்துவமனைக்கு நிர்வாகிகள் அழைத்து சென்றதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பும்ரா தலைமையில் விளையாடி வரும் இந்திய அணி, முதல் நாள் ஆட்டத்தில் 185 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. தொடந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 9 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி பவுலர்கள் அதிரடி காட்டி வருகின்றனர். ஆஸ்திரேலியா அணி 137 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
உணவு இடைவேளைக்கு பின் பவுலிங் செய்த கேப்டன் பும்ரா, ஒரேயொரு ஓவரை மட்டும் வீசிட்டுவிட்டு திடீரென ஓய்வு அறைக்கு சென்றார். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரையிலும் கூட பும்ரா களத்திற்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, பும்ராவுக்கு பதிலாக சர்ஃபராஸ் கான் களத்திற்கு வந்தார். இதனால் ரசிகர்கள் பும்ராவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல், அதிர்ச்சியுடன் குழப்பத்தில் உள்ளனர்.
ஓய்வறையில் இருந்த பும்ரா, இந்திய அணி நிர்வாகிகளுடன் ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். தொடர்ந்து பும்ரா மருத்துவருடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் காட்சியும் ஒளிபரப்பப்பட்டது. பும்ரா காயமடைந்தது தொடர்பான முழு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.|