வாட்ஸ் அப்-ல் பகிரப்படும் Voice Note மெசேஜ்களுக்கு புதிய கட்டுப்பாடு...! நிறுவனம் அதிரடி அறிவிப்பு...!
வாட்ஸ் அப்-ல் பகிரப்படும் புகைப்படங்களுக்கு இருக்கும் 'View Once' அம்சம் தற்போது Voice Note-களுக்கும் அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்தவகையில் நிறுவனம் தற்பொழுது மற்றொறு புதிய அப்டேட்களை கொடுப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன் படி பயனர்களின் வசதிக்காக “ Voice Note-களுக்கும்” View Once என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
புதிய அப்டேட்
வாட்ஸ்அப்-ல் பகிரப்படும் புகைப்படங்களுக்கு இருக்கும் 'View Once' அம்சம் தற்போது Voice Note-களுக்கும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் அனுப்பும் குரல் செய்திகள் ஒருமுறை மட்டுமே கேட்க முடியும், மேலும் இதனை ஷேர் செய்யவோ, பதிவு செய்யவோ முடியாது. பயனர்களின் தனியுரிமை மற்றும் செய்திகளின் பாதுகாப்பை மேம்படுத்த இந்த புதிய அப்டேட் அறிமுகம் என மெட்டா விளக்கம் அளித்துள்ளது .
அதேபோல நிறுவனம் சமிபத்தில் பயனர்கள் மெசேஜ் அனுப்பப்பட்ட 15 நிமிடங்களுக்குள் அதை எடிட் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது. முதலில் வாட்ஸ்அப் செயலியில் பிழையுடன் அனுப்பப்பட்ட மெசேஜை திறக்க வேண்டும். அதில் பயனர்கள் திருத்த விரும்பும் மெசேஜை சில நொடிகள் அழுத்தி பிடித்தால் எடிட் மெசேஜ் ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்து பயனர்கள் மெசேஜை எடிட் செய்யலாம்.