முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’நீங்கள் நினைத்து எல்லாம் நடக்கும்’..!! ’நன்மைகள் தேடி வரும்’..!! புதன் பகவானை இப்படி வழிபட்டு பாருங்கள்..!!

04:12 PM Feb 06, 2024 IST | 1newsnationuser6
Advertisement

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, இந்த இடத்தில் பொன் என்பது செல்வத்திற்கான அதிபதி குருவை குறிக்கும்.
ஜாதகத்தில் குருவின் பலம் இருப்பதைவிட புதன் பலமாக இருக்க வேண்டும். கல்வி, கலை, வித்தைகளுக்கு அதிபதி புதன் கிரகம். எந்த ஒரு விஷயத்தையும் கண்ணால் பார்த்தவுடன் அதை கையால் செய்வதற்கு புதன் அனுக்ரகம் வேண்டும். கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நன்கு படித்தவர்கள் கைநிறைய சம்பளம் வாங்குவதை கண்கூடாக பார்க்கிறோம். நம் வாழ்க்கைக்கு கல்விச் செல்வத்தை வழங்குபவர் புதன்.

Advertisement

புதன் ஒரு விசித்திரமான கிரகம். செவ்வாயைப் போலவே புதனும் இரு ஆதிபத்திய கிரகமாகும். ஜோதிட ஆச்சர்யமாக மிதுனத்தில் ஆட்சி பெறும் புதன், ஆட்சி வீடான கன்னியில் உச்சம் பெறுகிறார். மீனத்தில் நீசமடைகிறார். அறிவு, ஞானம் ஆகிய இரண்டுக்கும் இவரே அதிபதியாகி படிப்பறிவு, பட்டறிவு இரண்டையும் மனிதனுக்கு உணர்த்துகிறார்.

புதன் பகவானை வணங்கும் முறை

புதன்கிழமை என்றில்லாமல், நவக்கிரக புதன் பகவானை எந்தநாளில் வேண்டுமானாலும் வணங்கலாம். நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் புதன் பகவான் தந்தருளுவார்.

பரிகாரம்

6 லக்னங்களில் பிறந்தவர்களில் புதனின் வலு குறைந்து பலவீனமாக இருப்பவர்கள், சீர்காழிக்கு அருகில் இருக்கும் திருவெண்காடு எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் சுவேதாரண்யேஸ்வரரை புதன்கிழமையில் சென்று வழிபட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும். சென்னையில் இருப்பவர்கள் போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் இருக்கும் கோவூரில் குடிகொண்டிருக்கும் சுந்தரேசுவரரை வணங்கினால், கூடுதலான பலன்களைப் பெறலாம்.

Tags :
கிரகம்புதன்வழிபாடுஜாதகம்
Advertisement
Next Article