For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’என்ன செய்றது எல்லாம் பழக்கதோஷம்’..!! இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட ஓபிஎஸ்..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

08:31 AM Apr 03, 2024 IST | Chella
’என்ன செய்றது எல்லாம் பழக்கதோஷம்’     இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட ஓபிஎஸ்     அதிர்ச்சியில் பொதுமக்கள்
Advertisement

ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பரமக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “ பெரியோர்களே தாய்மார்களே உங்களது பொன்னான வாக்குகளை வெற்றிச்சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் செலுத்துமாறு” என்று தெரிவித்து உடனடியாக சுதாரித்துக் கொண்டு பலாப்பழம் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார். அப்போது பேசிய அவர் “என்ன செய்வது பழக்கதோஷம்” என்றும் கூறினார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தனி அணியாக செயல்பட்டு வரும் ஓபிஎஸ், இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அதன்படி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில், ஒ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது இரட்டை இலை சின்னத்துக்கு ஓபிஎஸ் ஓட்டுக் கேட்டதை அதிமுகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.யான நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜெயபெருமாள் அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சந்திரபிரபா போட்டியிடுகிறார்.

Read More : Job | ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..!! இந்த தகுதி இருந்தாலே போதும்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement