உங்களுக்கு ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வரவில்லையா...? உடனே இந்த இலவச எண்ணுக்கு கால் பண்ணுங்க...!
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வங்கி கணக்கிற்கு வரவில்லை என்றால் என்ன செய்வது...?
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை அன்றாடச் செலவிற்கும், சேமிப்பிற்கும் பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகையின் 10-வது தவணை ரூ.1000, நேற்று வரவு வைக்கப்பட்டது.
இதற்கிடையே, முன்னதாக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய, கால அவகாசம் வழங்கப்பட்டது. அவ்வாறு மேல் முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேரது விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இந்த விண்ணப்பதாரர்களுக்கும் இம்மாதம் முதல் ரூ.1,000 உரிமைத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மாதம்தோறும் 15-ம் தேதி வழக்கமாக உரிமைத் தொகை விடுவிக்கப்பட்டு வருவது.
உரிமைத் தொகை வரவில்லை என்றால் என்ன செய்வது...?
திட்டம் தொடர்பாக ஏதாவது சந்தேகங்கள் அல்லது பணம் வரவில்லை என்றால் தமிழக முதல்வரின் உதவி மைய எண் 1100-ஐ தொடர்பு கொண்டும் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம். அனைத்து இ-சேவை மையங்களிலும் தங்களின் விண்ணப்பத்தின் நிலைகுறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் kmut.tn.gov.in/login.html என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம். அதற்கு முதலில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை வைத்து என்ன காரணதிற்காக பணம் வரவில்லை என நீங்களே தெரிந்து கொள்ளலாம்.