முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கூட்டணி ஆட்சி: மோடிக்கு என்னென்ன சிக்கல்கள் வரும்..? இனிமே இதையெல்லாம் செய்யவே முடியாது..!!

In this post, we will see the difference between the BJP government and the BJP-led coalition government.
10:21 AM Jun 06, 2024 IST | Chella
Advertisement

பாஜக ஆட்சிக்கும், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கும் இடையே உள்ள, வித்தியாசம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

மக்களவைக்கான 18-வது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. அதன்படி, தனிப்பெரும் கட்சியான பாஜக, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சியின் பிரதமராக, வரும் 8ஆம் தேதி நரேந்திர மோடி பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இருந்த பாஜக ஆட்சிக்கும், இனி அமையப்போகும் பாஜக கூட்டணி ஆட்சிக்கும் பல வித்தியாசங்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக, மோடியால் இனி தன்னிச்சையாக எந்தவொரு முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாது எனவும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றன. கடந்த இரண்டு தேர்தல்களிலும் பாஜக தனிப்பெரும்பான்மையை பெற்றதால், கூட்டணி கட்சிகளை நாட வேண்டிய சூழல் ஏற்படவில்லை. இதனால், பணமதிப்பிழப்பு, கொரோனா ஊரடங்கு, ஜிஎஸ்டி மற்றும் நீட் தேர்வு போன்ற பல முக்கிய முடிவுகளை தன்னிச்சையாகவே செயல்படுத்தியது.

மோடி 3.0 ஆட்சிக்கான கட்டுப்பாடுகள்:

முன்பு சுதந்திரமான தலைவராக செயல்பட்ட மோடிக்கு, இந்த ஆட்சி காலத்தில் அப்படி இருக்க முடியாது. தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது. கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து அவர்களின் கருத்துகளை உள்வாங்கியே எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டியிருக்கும். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மோடியை மையப்படுத்தியே மொத்த அரசியல் நகர்வும் இருந்தது. ஆனால், அந்த சூழல் கூட்டணி ஆட்சியில் மாறும். மாநில அரசியல் கட்சி தலைவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள். அதற்கு நேற்றைய பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தின் புகைப்படங்களே சான்று. பல முக்கிய இலாக்காக்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதால், பாஜகவிடம் குவிந்து கிடந்த அதிகாரம் பரவலாக்கப்படும்.

கூட்டணி ஆட்சியில் மாநில கட்சி தலைவர்கள், தேசிய அரசியலில் மிக முக்கியப் பங்காற்றுவார்கள். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும், உபியில் அகிலேஷ் யாதவும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு பெற்றுள்ளனர். அதேபோல், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், மு.க.ஸ்டாலினின் திமுக போன்ற கட்சிகளும், பிராந்திய கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும். எந்தவொரு மசோதாவையும் நிறைவேற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவு அவசியம் என்பதால், பிராந்திய கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருக்கிறது.

சீர்திருத்த திட்டங்களில் தாக்கம்:

பொருளாதார சீர்திருத்தங்கள் ஒரு முக்கியமான மையமாக இருக்கும். ஆனால், குறிப்பிடத்தக்க தடைகளை எதிர்கொள்ளும். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பண்ணை சட்டங்கள் போன்ற பெரிய சீர்திருத்தங்களுக்கான முந்தைய முயற்சிகள் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தன மற்றும் ரத்து செய்யப்பட வேண்டியிருந்தது. பெரும்பான்மை இருந்தபோதிலும், இந்த மாற்றங்களைச் செயல்படுத்த பாஜக சிரமப்பட்டது. இந்நிலையில் கூட்டணி ஆட்சியில், சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்த கூட்டணி கட்சியினரிடையே பாஜக ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்.

மறுசீரமைத்தல்:

பாஜக மற்றும் ஆர். எஸ்.எஸ் இடையே அதிகார இயக்கத்தில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இருந்த தனிப்பெரும்பான்மை, முடிவெடுப்பதில் மோடிக்கு குறிப்பிடத்தக்க சுயாட்சியை அனுமதித்தன. ஆனால், தற்போது கூட்டணி கட்சிகளுக்கு இடமளிக்க வேண்டிய அவசியம் மற்றும் ஆர்எஸ்எஸ் மறைமுக செல்வாக்கால், அதிகாரத்தில் மறுசீரமைப்பு இருக்கக் கூடும்.

Read More : ’தமிழ்நாட்டை எப்போதும் உங்களால் ஆள முடியாது’..!! ராகுல் காந்தியின் வீடியோ வைரல்..!!

Tags :
BJPchandra babu naiduPM Modi
Advertisement
Next Article