நாம் தமிழர் கட்சிக்கு என்னதான் ஆச்சு..? அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்..!! இப்போது யார் தெரியுமா..?
நாம் தமிழர் கட்சியில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், தற்போது விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சிப் பணிகளும் சிறப்பாக செய்தேன். 2016இல் முதன்முதலாக ஒரத்தூர் கிளை செயலாளராக நியமிக்கப்பட்டு 2018 விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆகவும், 2019இல் விக்கிரவாண்டி தொகுதி செயலாளர் ஆகவும் இருந்தேன்.
2021இல் விழுப்புரம் தெற்கு மாட்ட தலைவர் ஆகவும், 2024 விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகவும் மற்றும் 2021 உள்ளாட்சி தேர்தலில் நானும் என் மனைவியும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராகவும் இருந்தோம். அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட 4 மாவட்ட கவுன்சிலர் உட்பட அனைத்து இடங்களிலும் 75% வேட்பாளர்களை நிரப்பினோம். கட்சியின் அனைத்து ஒன்றிய பொறுப்புகளை முடிந்த அளவு நிரப்பி அண்ணனிடம் கையொப்பம் வாங்கினோம். இது நாள் வரை நாம் செய்த எவையும் அவர் பொருட்படுத்தும்படி இல்லை.
நான் செய்வதைத்தான் செய்வேன். இது அனைத்து பொறுப்பாளருக்கும் அண்ணன் கூறியது. இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது மற்றும் நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்கக் கூடாது. என் இஷ்டப்படி தான் நான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறினார். மேலும், 2026 தேர்தலுக்கு இப்போதே முகம் தெரியாத வேட்பாளரை அறிவிக்க வேண்டிய தேவை என்ன? அண்ணா, நாங்கள் உங்களிடம் கேட்டது பணமோ பொருளோ அல்ல எங்களுக்கான மரியாதை மற்றும் எங்களுக்கான அங்கீகாரம், இதுவே உங்களால் தர முடியவில்லை. எனவே, நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : உங்களுக்கு இந்த வகையில் பணம் கிடைத்தால் என்ன அர்த்தம்..? ஆன்மீகம் சொல்வது என்ன..?