இது என்ன Bi-Directional மின் மீட்டர்..? ரூ.5,011 கட்டணமா..? என்ன நன்மைகள்..? மின்வாரியம் அதிரடி..!!
கரன்ட்டை தொட்டால்தான் ஷாக் அடிக்க வேண்டும் என்பதில்லை, கரன்ட் பில்லைப் பார்த்தால்கூட பலருக்கும் ஷாக் அடிக்கும். இதற்காகவே, மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் திட்டம் தான் `பிஎம் சூர்யா கர் முஃப்டீ பிஜிலி யோஜனா திட்டம்’ (PM Surya Ghar Muft Bijli Yojana). இந்தத் திட்டத்தில் சேருவதன் மூலம் கரன்ட் பில் கட்டணத்தை குடும்பங்கள் மிச்சப்படுத்தலாம், அதோடு வருமானமும் பெறலாம்.
வீட்டில் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்வோர், அதன் உபரியை மின் வாரியத்திற்கு வழங்கலாம். அதேபோல, இரவு நேரங்களில் சூரிய ஒளி இல்லாதபோது, மின் வாரியத்திடம் இருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ளலாம். இதனைக் கணக்கிட Bi-Directional மின் மீட்டர் பொருத்தப்படுகிறது. அதற்கான கட்டணத்தை ரூ.2,764ஆக மின்வாரியம் நிர்ணயித்துள்ளது. மும்முனை இணைப்புக்கு ரூ.5,011ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Read More : 100 யூனிட் இலவச மின்சாரத்தை இப்படி பயன்படுத்துறீங்களா..? ஸ்பாட்டுக்கு வரும் அதிகாரிகள்..!! மக்களே உஷார்..!!