ATM கார்டில் இத கவனிச்சிருக்கீங்களா? அசால்ட்டா இருக்காதீங்க.. மொத்த பணமும் காலிதான்..!! - RBI எச்சரிக்கை
நம்மில் பலர் கிரெடிட் கார்டு , எடிஎம் கார்டு, டெபிட் கார்டு என பல வைத்திருப்போம். ஒவ்வொரு கார்டின் பின்புறத்திலும் CVV என்ற மூன்று இலக்க நம்பர் இருக்கும். அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில கார்டுகளில் நான்கு இலக்கத்தில் CVV நம்பர் இருக்கும். CVV என்பது Card Verification Value. ஆன்லைன் மூலமாகப் பணப் பரிவர்த்தனை செய்யும்போது இந்த CVV நம்பர் கட்டாயமாகும். இதைப் பதிவிட்ட பின்னரே பரிவர்த்தனை நிறைவடையும்.
ஆன்லைன் பரிவர்த்தனைகளில் மோசடிகளைத் தடுக்கவும் பாதுகாப்புக்காவும்தான் இந்த நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அட்டைத் தகவலுடன் இந்த எண்ணும் மோசடி செய்பவரின் கைகளில் விழுந்தால், உங்கள் வங்கிக் கணக்கு காலியாகிவிடும். இந்த CVV நம்பரை யாரிடமும் பகிரக்கூடாது. அதேபோல, இதன் புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவிடக் கூடாது என்று வங்கிகள் தரப்பில் எச்சரிக்கப்படுகிறது.
உங்கள் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் CVV எண்ணை எப்போதும் மறைத்து வைத்திருக்க வேண்டும் அல்லது முடிந்தால் அதை எங்காவது எழுதி கார்டில் இருந்து நீக்க வேண்டும் என்று ரிசர்வ வங்கி கூறுகிறது. அப்போது தான் உங்கள் அட்டை எப்போதாவது தொலைந்துவிட்டால் அல்லது தவறான கைகளில் விழுந்தால், யாரும் அதைப் பயன்படுத்தி உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்ய முடியாது என வங்கி தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read more ; பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குச் சென்றது..? ஆதாரத்துடன் அண்ணாமலை கேள்வி