முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமிக்க என்ன காரணம்..? ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்..!!

07:19 AM Jan 12, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

முதல்வர் முக.ஸ்டாலின் அமைச்சரவையில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் முதலில் இடம்பெறவில்லை. பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. மேலும், அவர் சிறப்பு திட்ட அமலாக்கத்துறையையும் கவனித்து வருகிறார். இந்த துறை முதல்வர் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த துறை தான் மாநில அரசின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் துறையாகும்.

இந்த துறை உதயநிதிக்கு வழங்கப்பட்ட நிலையில், அவர் விரைவில் துணை முதல்வராக நியமனம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் கடந்த ஓராண்டுகளாக வலம் வருகிறது. இந்நிலையில், தற்போது அதற்கான காலம் நெருங்கிவிட்டதாக திமுகவினர் தெரிவித்து வருகின்றனர். அதாவது ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் வரும் 28ஆம் தேதி வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுவாக முதல்வராக இருப்பவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது தனது பொறுப்பை மூத்த அமைச்சரை கவனிப்பார்கள். அந்த வகையில், உதயநிதியை துணை முதல்வராக்கி தனது பொறுப்பை கவனிக்க வைக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் என்ற அறிவிப்பு என்பது ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில் நடக்கும் திமுக இளைஞர் அணி மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அப்போது உதயநிதி ஸ்டாலினிடம் பத்திரிகையாளர் ஒருவர், ”சார்.. நீங்க துணை முதல்வராக போறீங்க என்ற அறிவிப்பு வெளியாக இருக்கிறதா தகவல் வருகிறதே” என கேள்வி எழுப்பினார். அதற்கு உதயநிதி ஸ்டாலின், ''ஆமா.. ஆமா..'' எனக்கூறியதோடு ''எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருக்கப்போறாம்'' என ட்விஸ்ட் வைத்து சென்றார். துணை முதல்வர் பதவி குறித்து உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தாலும், விரைவில் அவர் அந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
உதயநிதி ஸ்டாலின்சேலம் மாநாடுதுணை முதல்வர்முதல்வர் முக.ஸ்டாலின்
Advertisement
Next Article