For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கண்களில் இரத்தம் கொட்டி ஆளை கொல்லும் மார்பர்க் வைரஸ்..!! அறிகுறிகள் என்னென்ன.. தவிர்ப்பது எப்படி?

What is the Bleeding Eye Virus? Know how it spreads, symptoms and treatment
07:36 AM Dec 07, 2024 IST | Mari Thangam
கண்களில் இரத்தம் கொட்டி ஆளை கொல்லும் மார்பர்க் வைரஸ்     அறிகுறிகள் என்னென்ன   தவிர்ப்பது எப்படி
Advertisement

'மார்பர்க்' வைரஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமாக பரவி வரும் நிலையில் இதுவரை 15 பேர் இந்த வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 'மார்பர்க்' வைரஸின் அறிகுறிகளாக கண்கள், மூக்கு, வாய் ஆகிய பகுதிகளில் இருந்து ரத்தம் வடியும் என தெரிய வந்துள்ளது. ரத்தம் மற்றும் உமிழ்நீர் ஆகியவை மூலம் இந்த வைரஸ் பரவும் தன்மை கொண்டதாக தெரியவந்துள்ளது.

Advertisement

இந்த ப்ளீடிங் ஐ வைரஸ் இப்போது ஆப்பிரிக்க நாடுகளைப் புரட்டிப் போட்டு வருகிறது. குறிப்பாகக் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. இதனால் ருவாண்டாவில் மட்டும் சுமார் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இது 17 ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பரவியுள்ளதும் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

அறிகுறிகள் ; இந்த வைரஸ் நமக்குப் பரவினால் இரண்டு முதல் 21 நாட்களில் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தசைப்பிடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை 3வது நாளில் இருந்து ஆரம்பிக்கும். 5ம் நாள் முதல் வாந்தி மற்றும் மலத்தில் ரத்தம் தென்படத் தொடங்கும். மேலும், மூக்கு, கண், காது, வாய் ஆகியவற்றிலிருந்து ரத்தம் கொட்ட தொடங்கும். சில நேரம் ஆண்களுக்கு ஆணுறுப்புகள் வீங்கவும் செய்யும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். எட்டு முதல் ஒன்பது நாட்களுக்குப் பிறகு பாதிப்பு தீவிரமாக இருந்தால் ரத்தப் போக்கு காரணமாக உயிரிழப்பும் கூட ஏற்படலாம்.

சிகிச்சை முறை : இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரில் சுமார் 50% பேர் உயிரிழக்கும் ஆபத்து இருக்கிறது. இதுவே இதை மிகவும் கொடிய வைரஸாக மாற்றுகிறது. அதேநேரம் தற்போது வரை இந்த கொடூர வைரஸுக்கு தடுப்பூசிகள் அல்லது தடுப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை. நோய் பாதிக்கப்பட்டோரின் உடலில் தென்படும் அறிகுறிகளுக்குச் சிகிச்சை அளிக்கலாம். மேலும், அதிகளவில் நீரை எடுத்துக் கொள்ளச் சொல்வது மட்டுமே சிகிச்சை முறையாக இருக்கிறது.

தவிர்ப்பது எப்படி? நீங்கள் வெளவால்கள் வசிக்கும் சுரங்கங்கள் அல்லது குகைகளுக்குச் சென்றால் அல்லது வேலை செய்தால், பாதுகாப்பு ஆடைகளை அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். MVD நோயாளிகள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவது மேலும் பரவுவதைத் தடுக்க முக்கியம்.

Read more : இரவில் எந்த நேரத்தில் உணவு அருந்த வேண்டும் தெரியுமா..? – மருத்துவர் விளக்கம்

Tags :
Advertisement