இரவு உணவை எப்போது சாப்பிட வேண்டும்..? டைம் ரொம்ப முக்கியம்..!! லேட்டா சாப்பிட்டால் என்ன ஆகும்..?
வேளைக்கு வேளை சாப்பிடுவது மட்டும் முக்கியமல்ல. சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அப்போதுதான் அது ஆரோக்கியமான உணவு முறையாகும். அதேசமயம் நீங்கள் உடல் எடை அதிகரிக்கிறதே என கவலைக்கொள்கிறீர்கள் என்றால், உங்கள் உணவு நேரமும் ஒரு காரணமாக இருக்கலாம். குறிப்பாக, இரவு உணவு சரியான நேரத்தில் சாப்பிடுவது அவசியம். ஆனால், பலரும் இரவில்தான் நினைத்த உணவை, அதிகம் சாப்பிடுகின்றனர். ஆனால், இரவு உணவை எப்போதும் சீக்கிரமே சாப்பிட்டுவிட வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆனால், பலர் நடு இரவில் எல்லாம், உணவை சாப்பிடுவார்கள். இது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை தரக்கூடும். சரி, இரவு உணவை எப்போதுதான் சாப்பிட வேண்டும்..? என இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
இரவு உணவு சாப்பிட சரியான நேரம் எது?
இதற்கான சரியான விடை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வேறுபடும் என்கின்றனர் வல்லுநர்கள். வயது, வாழ்க்கை முறை, நோய் அறிகுறிகள் ஆகியவற்றை பொருத்து அவர்களுடைய இரவு உணவு நேரம் மாறுபடலாம். உதாரணத்திற்கு நீங்கள் ஷிஃப்ட் முறைப்படி வேலை செய்கிறீர்கள். உங்களுக்கு இரவு ஷிஃப்ட் என்றால், உணவு முறை வேறு மாதிரியானதாக இருக்கும். ஆனால், மருத்துவர்கள் பொதுவான ரூல்ஸ் ஒன்றை வைத்திருக்கின்றனர். அதாவது எந்த நேரத்தில் சாப்பிடுவதாக இருந்தாலும் நீங்கள் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.
ஆய்வுகள் என்ன சொல்கிறது..?
ஆய்வுகள் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. நமது மனித உயிரியல் கடிகாரத்தின் அடிப்படையில் பார்க்கப்போனால் இந்த நேரத்திற்குள்தான் இரவு உணவை முடித்துவிட வேண்டும். ஆனால், இந்த நேரத்தை பலராலும் கடைபிடிக்க முடியாது. எனவேதான் குறைந்தபட்சம் தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும் என்கின்றனர். சாப்பிட்டு உடனே தூங்குவதால் நெஞ்சு எரிச்சல், வாயுத்தொல்லை , செரிமான தொந்தரவுகளை சந்திக்க நேரிடும்.
Read More : தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!! மக்களே பாதுகாப்பா இருங்க..!!