முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புயல் எப்படி உருவாகிறது.? புயல் கரையை கடந்துவிட்டது என்றால் என்ன.? தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

06:10 AM Dec 03, 2023 IST | 1newsnationuser4
Advertisement

பருவமழை காலங்களில் வானிலை ஆய்வு மையங்களின் மூலம் புயல் எச்சரிக்கை விடுவதை பார்த்திருப்போம். நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான புயல் வீசி பல சேதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. புயலின் போது காற்று பல கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதையும் இதனால் மிகப்பெரிய இழப்பு ஏற்படுவதையும் செய்திகளின் மூலம் அறிந்திருக்கிறோம். இந்தப் புயல் எவ்வாறு உருவாகிறது இதற்கான காரணம் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisement

புயல் உருவாவதற்கு பூமியின் சுழற்சியும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கடல் மட்டத்தின் மேற்பரப்பில் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக நீடிக்கும் போது அப்பகுதியில் இருக்கும் காற்று வெப்பமடைந்து நீராவி ஆகி மேல் நோக்கி செல்கிறது. இதனால் அந்த இடத்தில் வெற்றிடம் உருவாகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக உயர் அழுத்த பகுதியிலுள்ள காற்று கீழ்நோக்கி வருகிறது. இதன் காரணமாக காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படுகிறது.

இப்போது பூமியின் சுழற்சியின் காரணமாக காற்றழுத்த தாழ்வு நிலையிலுள்ள காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரிக்கிறது. இது கடலின் மீது மையம் கொண்டு அதிக வேகத்தில் கரையை நோக்கி நகரும் போது புயலாக உருவாகிறது. இவ்வாறு சுழன்று வீசும் காற்று மேக கூட்டங்களுடன் சேர்ந்து கடற்கரையை நெருங்கும் போது புயலுடன் கூடிய கனமழை உருவாகிறது. இந்தக் காற்றானது நிலப்பரப்பில் பயணிக்கும் போது வலுவிழந்து அதன் வேகம் குறைகிறது.

சில நேரங்களில் காற்றின் திசை மற்றும் பூமியின் சுழற்சியால் ஒரு இடத்தில் மையம் கொண்டிருக்கும் புயல் வேறு திசையை நோக்கி நகர்ந்து செல்லலாம். இதன் காரணமாக அருகில் இருக்கும் நிலப்பரப்பிற்கு எந்தவித சேதமும் ஏற்படாது. இதனை தான் புயல் கரையை கடந்தது என அழைக்கிறார்கள்.

Tags :
Air pressure zoneExplanationRainfallstorm
Advertisement
Next Article