கலை நயமிக்க காஞ்சி கைலாசநாதர் கோயில்.. ஊர்ந்துதான் வலம் வரவேண்டுமாம்..!! இப்படி ஒரு சிறப்பா..?
தென்திசை கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோவில் சுமார் 1200 வருடங்களுக்கு முன்னர் பல்லவர்களால் கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவிலின் அமைப்பு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கோவில்களை ஒத்துள்ளது. போரில் சிங்கம் போன்றவன் என்ற பெருமை பெற்ற அரசன் ராஜசிம்மன். அதனைச் சுட்டிக்காட்டும் விதமாக, கோயில் முழுவதையுமே சிங்கங்களே தாங்கி நிற்பது போலக் காட்சியளிக்கிறது. பிரம்மாண்டமாக அமைந்துள்ள நந்தி தேவர் அனுமதி பெற்றே நாம் கோவிலுக்குள் செல்ல முடியும்.
இங்குள்ள ஷோடஷ லிங்கம் 16 பட்டைகள் கொண்டு பளபளவென்று வீற்றிருக்கிறார். வெளிப்பிரகாரம் முழுவதும் சிறுசிறு மண்டபங்கள் தொடர்ச்சியாக ஒன்றுடன் ஒன்று இணைந்த தோற்றம். அச்சிறு மண்டபத் தூண்கள் அனைத்திலுமே முன்னிரு கால்களைத் தூக்கி பின்னிரு கால்களில் நின்றோ அமர்ந்தோவுள்ள சிங்கங்களின் சிற்பங்கள் மிகவும் பிரமிப்பைத் தருகின்றது.
கோவில் கற்பக்கிரகத்தை வலம் வருவது எல்லோராலும் முடியாத ஒரு வித்தியாசமான வழி. இறைவனுக்கு வலப்புறம் சந்நிதியை ஒட்டி ஒரு சிறிய துவாரம் உள்ளது. கிட்டத்தட்ட ஒன்றறையடி நீளம், அகலம், உயரத்தில் பாறையில் செதுக்கியது. இரண்டு படி ஏறி அதனுள் ஊர்ந்து சென்று மிகக் கீழே உள்ள படியில் இறங்கிய பின் ஒருவர் நடந்து வலம் வரக்கூடிய பாதை. மீண்டும் வெளியே வரும் இடத்தில் ட போன்ற அமைப்புக்குள் நுழைந்து வளைந்து வெளியே வரலாம். அது முடியாதவர்கள் படி ஏறி வரலாம். வெளியே வருவதை விட உள்ளே நுழைவது சுலபமல்ல. உடல்வாகு, வளையக்கூடிய தன்மையைப் பொருத்தது.
இக்கோவில் காலை 6 மணி முதல் 10 மணி வரை,மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள கைலாய நாதரை தரிசித்து செல்கின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள கைலாசநாதருக்கு புது வஸ்திரம் சார்த்தியும். பால் அபிஷேகம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
Read more ; ஜீவனாம்சம் கேட்ட மனைவி.. 20 மூட்டைகளில் சில்லறைகளை கொட்டிய கணவன்..!! – நீதிமன்றத்தில் பரபரப்பு