மாதவிடாய் கால ஒற்றைத் தலைவலி.. என்ன காரணம்..? எப்படி சரி செய்வது..?
தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களில் அதிகமாகக் காணப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஒற்றை தலைவலியின் தாக்கம் அதிகரித்து காணப்படலாம். ஏனென்றால் உடலில் அப்போது ஹார்மோன் அளவு குறைவதால் தலைவலி உருவாகலாம் என கருதப்படுகிறது.
புவனேஸ்வரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையின் ஆலோசகர் நரம்பியல் நிபுணர் டாக்டர் ஆகாஷ் அகர்வால் கூறுகையில், "ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவின் மாற்றங்கள் காரணமாக பெண்கள் தலைவலிக்கு ஆளாகிறார்கள். அதாவது அண்டவிடுப்பின் (ovulation) பின்னர், கருப்பையிலிருந்து முட்டை வெளியேறும் போது, ஹார்மோன் அளவு குறையத் தொடங்குகிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் பீரியட்ஸ் தொடங்குவதற்கு முன் மிகக் குறைந்த மட்டத்தில் இருக்கும். இதனால் ஹார்மோன்களின் அளவு மேலும் குறைந்து பீரியட்ஸின்போது தலைவலிக்கு வழிவகுக்கிறது.
ஒற்றைத் தலைவலி தூண்டுபவை : சீஸ், ஒயின், சாக்லேட், பருப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சில நாற்றங்கள், பிரகாசமான ஒளி, தூக்கக் கலக்கம், மாதவிடாய், மாதவிடாய், பயணம், வானிலை மாற்றங்கள் மற்றும் மன அழுத்தம் ஆகியவை ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகளாக உள்ளன. இந்த நோயாளிகள் ஈஸ்ட்ரோஜனை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும், மேலும் இது புகைப்பிடிப்பவர்கள் அல்லது பக்கவாதத்தின் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்களில் பன்மடங்கு அதிகரிக்கிறது.
ஒற்றைத் தலைவலியின் பல கட்டங்கள் : ஒற்றைத் தலைவலி 4 கட்டங்களாக வெளிப்படக்கூடியது. முதற்கட்டம் ப்ரோட்ரோம், இது தலைவலிக்கு சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் முன்பு வரை ஏற்படும். இந்த கட்டத்தில் எரிச்சல், மனச்சோர்வு, அதிகமாக கொட்டாவி விடுதல், பசி போன்றவை ஏற்படும்.
இரண்டாவதாக ஆரா கட்டம், கண்ணுக்கு முன்னால் வண்ண விளக்குகளின் பளீச் பிரகாசம், ஜிக் -ஜாக் கோடுகளை பார்ப்பது போன்ற உணர்வு, உடலில் உணர்வின்மை, கூச்ச உணர்வு இல்லாது போதல் ஆகியவை ஆகும். ஒற்றை தலைவலி இந்த கட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாமலும் ஏற்படக்கூடும். மூன்றாவது கட்டம் 4-72 மணிநேரம் நீடிக்கும் தலைவலி மற்றும் நான்காவது கட்டம் ஹேங்கவுட் எனப்படும் ஒற்றைத் தலைவலி ஆகும், அப்போது பாதிக்கப்பட்ட நபர் பொதுவாக உடல்நிலை சரியில்லாமல், எரிச்சல் மற்றும் குழப்பத்துடன் இருப்பார்.
சிகிச்சை முறை :
* ஒரு நல்ல உடல் பயிற்சி வழக்கத்தை வைத்திருப்பது உங்கள் தலைவலியை சமாளிக்க உதவும். தியானம், யோகா, மற்ற பயிற்சிகளில் ஆழ்ந்த சுவாசம் செய்வது உங்கள் தசைகளை தளர்த்தவும், பதற்றத்தை குறைக்கவும், தலைவலி அறிகுறிகளை மேம்படுத்தவும் உதவும்.
* ரீன் டீ, க்ரீன் காபி போன்ற ஆரோக்கியமான காஃபினேட் பானங்களைக் குடித்தால் தலைவலியிலிருந்து நிவாரணம் அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. நரம்புகளைச் சுற்றியுள்ள இரத்த ஓட்ட அழுத்தம் அதிகரிக்கும் போது ஒரு நபர் தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு காஃபினேட்டட் பானம் குடிப்பது இரத்த நாளங்களை சுருக்கி இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது.
* தலைவலி / ஒற்றைத் தலைவலிக்கு இரவு நல்ல தூக்கம் பெறுவது முக்கியம். உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். உங்களால் முடிந்தவரை ஓய்வெடுக்கவும். 7-8 மணி நேரம் தூங்குங்கள்.