முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

போதைப் பொருளால் தமிழகம் என்ன ஆகப் போகிறதோ..? வருத்தப்பட்ட ஆளுநர்..!! பிரேமலதா சொன்ன விஷயத்தை கவனிச்சீங்களா..?

Premalatha Vijayakanth has given an interview that the Governor expressed his sadness that what is going to happen to the future of Tamil Nadu due to drugs.
03:38 PM Jun 28, 2024 IST | Chella
Advertisement

போதைப் பொருட்களால் தமிழகத்தின் எதிர்காலம் என்ன ஆகப் போகிறதோ என்று ஆளுநர் மன வருத்தத்தோடு தெரிவித்தார் என பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார்.

Advertisement

கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கள்ளக்குறிச்சியில் இத்தனை உயிர்கள் போன பிறகு, இன்றைக்கு இந்த அரசு ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயத்தை அழித்துவிட்டதாகக் கூறுகிறது. இப்போது எடுத்த இந்த நடவடிக்கைகளை முன்கூட்டியே ஏன் எடுக்கவில்லை..? கள்ளச் சாராயம் வரக்கூடாது என்பதற்காகத்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அப்படி இருக்கும்போது கள்ளச்சாராயம் மீண்டும் ஏன் வருகிறது?

ஆட்சியாளர்கள், அதிகாரிகள், காவல்துறை துணையில்லாமல் நிச்சயமாக கள்ளச் சாராயம் காய்ச்ச முடியாது. ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது, விற்கப்படுகிறது என்று கள்ளக்குறிச்சி மக்கள் சொல்கிறார்கள். ஆளும் கட்சியின் உதவியோடுதான் இதெல்லாம் நடக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மக்களின் வறுமையை பயன்படுத்தி கள்ளச்சாராயம் போன்ற போதை வஸ்துகளை விற்று தமிழகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளனர். இது குறித்துத்தான் ஆளுநரிடம் முறையிட்டுள்ளோம். மனு அளித்துள்ளோம்.

ஒரு பக்கம் குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். மற்றொருபுரம் மக்கள் உயிரிழக்கிறார்கள். இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது. சம்பந்தப்பட்ட அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். மதுபான ஆலைகளை மூட வேண்டும். நாங்கள் சொன்னதை ஆளுநர் மிக கவனமாகக் கேட்டார். ஆளுநர் முகத்தில் மிகப்பெரிய கவலை தெரிந்தது. இதற்கு முன்பு பல முறை அவரை சந்தித்துள்ளோம். இன்று அவரது முகத்தில் கவலை தெரிந்தது. போதைப் பொருட்களால் தமிழகத்தின் எதிர்காலம் என்ன ஆகப் போகிறதோ என்று ஆளுநர் மன வருத்தத்தோடு தெரிவித்தார். இது கவலைக்குரிய விஷயம் எனக்கூறி எங்களிடம் மிகவும் வருத்தப்பட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.

Read More : மாதந்தோறும் நல்ல வருமானம் பெற எவ்வளவு ரூபாய் முதலீடு செய்யலாம்..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
ஆளுநர் ஆர்.என்.ரவிபிரேமலதா விஜயகாந்த்
Advertisement
Next Article