குளோபல் பாய்லிங் உலக அழிவின் முதல் படியா.? ஐநா சபை எச்சரிக்கை.!மிகப்பெரிய அழிவுகளின் மூல காரணம்.!
குளோபல் வார்மிங் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் தற்போது குளோபல் பாயிலிங் தொடங்கி விட்டதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்து இருக்கிறது. இதன் காரணமாக காலநிலையில் அசாதாரண மாற்றங்கள் உருவாகும் எனவும் ஐநா சபை அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
குளோபல் வார்மிங் என்பது புவி வெப்பமயமாதல் ஆகும். ஆனால் குளோபல் பாய்லிங் என்பது பூமி கொதிப்படைந்ததை குறிக்கிறது. சுமார் 1,20,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வெப்பத்தை இந்த வருடம் சந்தித்ததாக ஐநா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்திருக்கிறார்.
இந்த குளோபல் பாயிலிங் ஏற்பட்டுள்ளதால் பூமியின் காலநிலையில் கடுமையான மாற்றங்கள் ஏற்படும் எனவும் எச்சரித்து இருக்கிறது. இதன் காரணமாக அதிகப்படியான வெப்பநிலை மற்றும் பஞ்சம் நிலவுவதோடு பல பகுதிகளிலும் கடுமையான சூறாவளி மற்றும் மழை வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்த குளோபல் பாயிலிங்கால் பனிப்பாறைகள் வேகமாக உருகி கடலின் மட்டம் உயரும் அபாயமும் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக பூமியின் சமநிலை பாதிக்கப்பட்டு பல உயிரினங்கள் அழியும் அபாயம் இருப்பதாகவும் இந்த உயிரினங்கள் அழிவதனால் உணவுச் சங்கிலியில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வரும் காலங்களில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். குளோபல் பாயிலிங் எனப்படும் வெப்பநிலை உயர்வால் மனித இனத்தில் இதயம் மற்றும் சுவாசம் சார்ந்த நோய்கள் வேகமாக பரவலாக எனவும் அஞ்சப்படுகிறது.