Dehydration: வெயில் நேரத்தில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்து! எளிதாக விட்டால் மரணம் நிகழும்…! அறிகுறிகள் என்ன..!
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. அதீத வெயில்காரணமாக உடல்நலப் பிரச்னைகளும் வரத் தொடங்கிவிடும். அவற்றில் முக்கியமான ஒன்று, டி-ஹைட்ரேஷன்(நீரிழப்பு). அது ஏன் ஏற்படுகிறது, அதன் விளைவுகள் என்ன?
டி-ஹைட்ரேஷன் என்றால் என்ன? உடலில் உள்ள நீர் அதிகளவில் குறைவதால் டி-ஹைட்ரேஷன் ஏற்படுகிறது. சில சமயங்களில் இவை ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக அமைகிறது. பெரும்பாலும் கோடைக்காலங்களில்தான் ஏற்படுகிறது.
தண்ணீர் குடிக்காமல் இருத்தல், டையரியா, வாந்தி, அதிகளவிலான வியர்வை, அதிக சிறுநீர் கழித்தல், காய்ச்சல் போன்ற காரணங்களால் டி-ஹைட்ரேஷன் ஏற்படுகிறது. இந்த டி-ஹைட்ரேஷனால் அதிகளவில் முதியவர்கள், குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள், கிட்னி பிரச்னை உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். வெயில் நேரத்தில் அதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் டி-ஹைட்ரேஷன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
டி-ஹைட்ரேஷனின் அறிகுறிகள் என்னென்ன? வாய்கள் வறண்டு காணப்படும், தாகம் அதிகமாக எடுக்கும், சிறுநீர் அடர்மஞ்சள் நிறத்தில் போகும், உடல் சோர்வு, மயக்கநிலை ஆகியவை டி-ஹைட்ரேஷனின் அறிகுறிகள். சிறியவர்களுக்கான அறிகுறிகள் எது என்றால், அழுதால் கண்களில் தண்ணீர் வராதது, அதீத காய்ச்சல், அதிகளவிலான தூக்கம், கண்களில் குழி விழுந்தார்போன்று காணப்படுவது. டி-ஹைட்ரேஷனை 3 நிலைகளாக பிரிக்கலாம்.
முதல்நிலை நம் உடலில் 5ல் இருந்து 6 சதவீதம் தண்ணீர் இழந்தால் தலைவலி மயக்கம், உடல்சோர்வு காணப்படும். இரண்டாம் நிலை 7ல் இருந்து 10 சதவீதம் தண்ணீரை இழந்தால் Low BP வரும். சிறுநீர் கழிக்க முடியாது. 10 சதவீதத்துக்கு மேல் உடலில் இருந்து தண்ணீரை இழந்தால் மரணம் கூட ஏற்படலாம். அதிகளவில் தண்ணீர் குடித்தாலே டி-ஹைட்ரேஷன் வராமல் நம் உடலை பாதுகாத்துக்கொள்ளலாம்.