”நான் பேசியது தப்பு தான்”..!! ”இனி திருந்தி வாழப்போறேன்”..!! வைரலாகும் சவுக்கு சங்கரின் ஆடியோ பதிவு..!!
சவுக்கு சங்கர் பேசியதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “நான் பேசியது தவறு. தான் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஃபேமிலினா ஃபேமிலி பாலிடிக்ஸ் பேசித்தான் தீரனும் ஒரு பத்திரிகையாளனா. பெர்சனலா தொட்டிருக்கக்கூடாது. அவசியம் இல்லாத விஷயத்தை நான் கொடுத்துருக்கேன். இந்த முறை சப்போர்ட் குறைஞ்சுடுச்சு. அதே தப்பை நான் மீண்டும் செய்தால், இருக்குற கொஞ்ச ஆதரவும் போய்ரும். எனக்கு இந்த தொழிலை விட்டா வேற தொழில் தெரியாது.
உள்ள போயிட்டு வெளிய வந்ததும் ஜெட் வேகத்துல போயிட்டு இருக்கேன். அதுல இந்த தனிப்பட்ட விஷயங்களை பேசியிருக்கேன். பேசுனதாலதான் இந்த சிக்கல் வந்துருக்குனு தெரியுது. உனக்கு இதே வேலையானு சொல்லிட்டுதான் பெயில் குடுத்தாங்க. இதுக்கு அப்புறம் பொறுப்புள்ள பத்திரிகையாளனா நடந்துக்குவேனு கோர்ட்ல சொல்லிருக்கேன். அது மட்டுமில்லாம எனக்கு வயசாயிடுச்சு.
நான் 33 வயசுல ஜெயிலுக்கு போனதுக்கும், 48 வயசுல ஜெயிலுக்கு போறதுக்கும் வித்தியாசம் இருக்குது. எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை இருக்கு. நான் மட்டும் ஏன் கஷ்டப்படணும்? என்னை யூஸ் பண்ணிகிட்ட எல்லோருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் நல்லா இருக்குது. அவங்க யூஸ் பண்ணிக்க நானே அனுமதிச்சேன். யாரும் என்னை கட்டாயப்படுத்தல.
இனிமே நான் ஏன் அதை பண்ணனும்? எதுக்கு நான் இனிமே பண்ணனும்? கஷ்டம் இருக்கத்தான் செய்யும். வருமானம் குறைந்தாலும், மாறித்தான் ஆக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுட்டேன்” என்று பேசியுள்ளார். ஆனால், இந்த ஆடியோவில் பேசியது சவுக்கு சங்கர் தான் என்பது இதுவரை உறுதியாகவில்லை.