தமிழ்நாட்டு மக்களுக்காக மத்திய அரசு என்ன செய்தது..? முதலமைச்சர் முக.ஸ்டாலின் காட்டமான பதிவு..!!
”பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது திராவிட மாடல் அரசு. ஆட்சி அமைந்தது முதல், மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 அளவுக்கு செலவில் மிச்சம், காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமை குறைப்பு, புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய், மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் என பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசின் நிதியை கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு.
இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன? ஒன்றிய நிதியமைச்சரின் பேச்சுக்கு விரிவான பதில் தந்திருக்கிறார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு" என்று தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.