முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’நீங்களே எதையாச்சும் வெச்சுட்டு போயிட்டா என்ன ஆகுறது’..!! போலீசாரை கதிகலங்க வைத்த ஃபெலிக்ஸ் மனைவி..!!

02:03 PM May 14, 2024 IST | Chella
Advertisement

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுவின் வீட்டில் போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் ஃபெலிக்ஸின் மனைவி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

Advertisement

பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார், வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். சவுக்கு சங்கரை தொடர்ந்து, அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்த யூடியூப் சேனலின் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் கோவை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, ஃபெலிக்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் வைத்து ஃபெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஃபெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை அழைத்து வந்த போலீஸார், அங்கிருந்து விசாரணைக்காக அவரை திருச்சி அழைத்துச் சென்றனர். திருச்சி மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து ஃபெலிக்ஸ் ஜெராலிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஃபெலிக்ஸை மே 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபெலிக்ஸ் ஜெரால்டின் வீட்டிற்கு இன்று காலை சென்ற போலீஸார், அவரது வீட்டில் சோதனை நடத்துவதற்கான கோர்ட் அனுமதியை காண்பித்தனர்.

ஆனால், அவர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்திய ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன் ஆஸ்டின், "நீங்க எதையாவது உள்ளே வெச்சுட்டு போயிட்டா என்ன ஆகுறது?” என்று கேள்வி எழுப்பினார். பின்னர், “உங்களை நாங்க செக் பண்ணணும். உள்ள எத்தன பேரு வரப்போறீங்க?” என்று கேள்வி எழுப்பினார். அவருக்கு உரிய பதில்களை பொறுமையுடன் போலீஸார் கூறினர். பின்னர் தான், சோதனைக்கு போலீஸார் அனுமதிக்கப்பட்டனர். தற்போது திருச்சி போலீஸார், ஃபெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Read More : தீவிரமடைந்த கோடை மழை..!! 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!! வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

Advertisement
Next Article