கங்கை அமரனுக்கு என்ன ஆச்சு..? பதறிப்போன குடும்பம்..!! ICU-வில் தீவிர சிகிச்சை..?
இசையமைப்பாளர் இளையராஜாவின் உடன் பிறந்த சகோதரர் கங்கை அமரன். இவர், ஆரம்பத்தில் இளையராஜாவுக்கு உதவிகளை செய்து வந்த நிலையில், பிறகு தமிழ் சினிமாவில் இசையமைக்க தொடங்கினார். அதோடு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பாடல் ஆசிரியர், பாடகர் என்று பல திறமைகள் கொண்டு விளங்குகிறார். வெள்ளித்திரை மட்டுமின்றி, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலந்து கொண்டுள்ளார்.
இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள கங்கை அமரன் சிறந்த இயக்குனராக பிரபலமடைந்துள்ளார். அதிலும், பிரபு நடிப்பில் வெளியான கோழி கூவுது படத்தின் மூலமாகத்தான் கங்கை அமரன் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். இந்நிலையில், 77 வயதாகும் கங்கை அமரன் நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர், தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ள நிலையில், அவர் உடல்நலத்தில் என்ன பிரச்சனை என்பதை தெரிவிக்கவில்லை.
Read More : “ஆளுநர் யாராக இருந்தாலும் பேரவை மரபை பின்பற்றியே ஆக வேண்டும்”..!! தவெக தலைவர் விஜய் பரபரப்பு பதிவு..!!