நடிகர் ஜெயராமுக்கு என்ன ஆச்சு?. வைரலாகும் புகைப்படம்!. ரசிகர்கள் கவலை!
Actor Jayaram: சினிமாவால் பலருக்கும் பெருமை கிடைக்கும், ஆனால் சிலரால் தான் சினிமாவிற்கே பெருமை கிடைக்கும். அப்படி தமிழ் மற்றும் மலையாள சினிமாவிற்கு பெருமை சேர்த்த நடிகர்களில் ஒருவர் ஜெயராம். மலையாளத்தில் கலக்கி கொண்டிருந்த ஜெயராம் தமிழில் கோகுலம் என்ற படத்தின் மூலம் நடிக்க துவங்கினார். இதன்பின் மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தமிழில் துப்பாக்கி, உத்தம வில்லன், பஞ்சதந்திரம், பொன்னியின் செல்வன், தெனாலி உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவையாகவும், சீரியஸாகவும் என எந்த வித கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பட்டையை கிளப்புவார். மோகன்லால், மம்மூட்டி, கமல் ஹாசன், விஜய் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயராம் ஒரு நடிகர் மட்டுமல்ல ஒரு நல்ல பின்னணி பாடகரும் ஆவார். அதுமட்டுமின்றி மிமிக்கிரி கலைஞர் மற்றும் செண்ட தாள வாத்தியக்காரராகவும் ரசிகர்களால் அறியப்படுகிறார்.
சென்னையில் வசித்து வரும் இவர், தனது படங்கள் மற்றும் குடும்பம் குறித்த விவரங்களை சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வது வழக்கம். அந்தவகையில், தற்போது ஜெயராமின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செல்ஃபி புகைப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் டி-ஷர்ட் அணிந்துள்ளார்.
ஆனால் அவரது சோர்வான வெளிப்பாடு அவரது நல்வாழ்வைப் பற்றிய கவலையை எழுப்பியுள்ளது. ஜெயராம் நலமா என்று ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். ஆனால், சிலர் இது வெறும் கண்ணாடி செல்ஃபி என்று கூறி வருகின்றனர். பெரும்பாலும் திரைப்பட பாத்திரங்களுக்காக தனது உடலமைப்பை அவ்வபோது மாற்றியமைக்கும் இவர், கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு உடல் எடையை அதிகரித்து, குறைத்துள்ளார், இதுபோன்ற மாற்றங்கள் வைரலாகி வருகின்றன. இருப்பினும், அவரது சமீபத்திய தோற்றம் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்திற்கானதா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
Readmore: ஆபத்தான Mpox கிளேட் 1 மாறுபாடு என்றால் என்ன?. எவ்வாறு வேறுபடுகிறது?. இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?