”என்னது அரசு ஹோட்டலை விலைக்கு கேட்டேனா”..? தீயாய் பரவிய தகவல்..!! பதறியடித்து விக்னேஷ் சிவன் கொடுத்த விளக்கம்..!!
கடந்த வாரம் புதுச்சேரி சென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு கொஞ்ச நேரம் மட்டுமே இருந்தது. இருப்பினும், அந்த மீட்டிங்கை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரபரப்பு தகவல் ஒன்று பரவி வந்தது. அதாவது. புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அம்மாநில அரசின் 'சீகல்ஸ்' ஹோட்டல் இயங்கி வருகிறது.
அந்த ஹோட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், அரசு சொத்தை விற்க முடியாது என்று அமைச்சர் லட்சுமி நாராயணன் சொல்ல.. குறைந்தது ஒப்பந்த அடிப்படையிலாவது வாடகைக்குத் தருவீர்களா? என்று விக்னேஷ் சிவன் அமைச்சரிடம் கேட்டதாக செய்தி பரவியது. இதனால், பலரும் இயக்குநர் விக்னேஷ் சிவனை கலாய்த்து வந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில், "பாண்டிச்சேரியில் நான் அரசு சொத்தை வாங்க முயன்றதாகப் பரப்பப்படும் செய்தியைக் குறித்துத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் பாண்டிச்சேரி விமான நிலையத்தில் எனது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி பெறவே அங்கு சென்றேன். அப்போது மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் சுற்றுலா அமைச்சரைச் சந்தித்து பேசினேன்.
இந்த சந்திப்புக்குப் பிறகு, என்னுடன் வந்த உள்ளூர் மேனேஜர் அவருக்காக ஏதோ விசாரித்திருக்கிறார். அதைக் காரணமே இல்லாமல் என்னுடன் இணைத்து தகவலைப் பரப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் நீங்கள் உருவாக்கிய மீம்ஸ், ஜோக்குகள் மிகவும் வேடிக்கையாக இருந்தது. ஆனாலும், அவை தேவையற்றவை. எனவே, இதைத் தெளிவுபடுத்த விரும்பினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : அசத்தல் அறிவிப்பு… அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு திருக்குறள் போட்டி…! ரூ.2 லட்சம் பரிசுத்தொகை…