அதிகம் பயப்படுபவரா நீங்கள்.? அதன் ஆபத்துக்களை அறிந்து கொள்ளுங்கள்.!
பயம் என்பது மனிதனுக்கு இயற்கையாக நிகழக்கூடிய ஒரு உணர்வாகும். இதுவும் சுகம் துக்கம் மகிழ்ச்சி கோபம் போன்ற ஒரு உணர்வே பயம். பயமென்பது அசாதாரண சூழ்நிலையில் மனிதனுக்கு ஏற்படக்கூடிய ஒரு உணர்வாக இருக்கிறது. நம்மால் ஒரு விஷயத்தை கையாள முடியாது அல்லது நம்மால் சமாளிக்க முடியாத ஒரு சூழ்நிலைகள் நமக்கு ஏற்படும் போது இந்த பய உணர்வு அதிகரிக்கிறது. பயத்தினால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த உணர்வு உடலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது.
பயம் ஏற்படுவதற்கு நம் உடலில் உணர்வுகளை கடத்தக்கூடிய நியூரான் என்ற செல் காரணமாக அமைகிறது. ஒருவர் பயப்படும் போது அவரது உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. இது மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. ஒருவரது உடலில் பய உணர்வு அதிகரிக்கும் போது அவரது தன்னம்பிக்கை குறைய தொடங்குகிறது.
பயப்படும் போது உடலில் ஏற்படும் மாற்றத்தால் கார்டிசோல் அதிகமாக சுரக்கிறது. இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறது. கார்டிசோல் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய உடலில் சுரக்கும் ஒரு ரசாயனம் மூலக்கூறு ஆகும். அதிகப்படியான மன அழுத்தம் மன நோய்கள் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது. மேலும் ஒருவருக்கு திடீரென ஏற்படும் பய உணர்வு அவர்களது இதயத்தின் திடீர் செயல் இழப்பிற்கும் காரணமாக அமைகிறது.
ஏனெனில் இதயத்துடிப்பு கார்டியாக் கண்டக்ஷன் சிஸ்டம் என்ற மின்சார சிக்னல்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பிடித்துக் கொண்டிருக்கிறது. திடீரென ஏற்படும் அச்ச உணர்வால் இந்த செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு இதயம் செயலிழக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் பய உணர்வு உயர் ரத்த அழுத்தம் ஏற்படவும் காரணமாக அமைகிறது. சிலருக்கு பயத்தால் உடல் தசைகள் இருக்கமடைந்து படபடப்பு மற்றும் அதிகமான வியர்வை போன்ற உணர்வுகள் ஏற்படக்கூடும்.