முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்னும் என்னென்ன சம்பவம் இருக்கோ?... தமிழ்நாட்டில் கடுமையான புயல் வீசும்!… வைரலாகும் பஞ்சாங்க எச்சரிக்கை!

08:05 AM Nov 30, 2023 IST | 1newsnationuser3
Advertisement

கார்த்திகை மாதத்தில் தமிழ்நாட்டில் கடுமையாக புயல் வீசும் என்று முன்பே கணித்து எழுதப்பட்ட தமிழ் பஞ்சாங்கம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் வானியல் நூல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில், 2015ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் சூழ்ந்த போதும், கன்னியாகுமரியை புயல் சூறையாடிய போதும் வானிலை ஆய்வாளர்கள் கணித்து கூறுவதற்கு முன்பே பஞ்சாங்கத்தில் கணித்து கூறியிருந்தனர். இந்த ஆண்டும் சோபகிருது வருட தமிழ் பஞ்சாங்கத்தில் கார்த்திகை மாதத்தில் கடுமையாக புயல் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் உருவாகும் புயல் தமிழ்நாட்டை தாக்கும். இந்த ஆண்டு மட்டும் நவம்பர் 28 ஆம் தேதி புயல் சின்னம் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 30 தென்கோடு உயரும் மழை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி கடலூருக்கு கிழக்கே புதிய புயல் சின்னம் உருவாகும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 12ஆம் தேதி கார்த்திகை அமாவாசை நாளில் பாண்டிச்சேரிக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றுடன் கனமழை பெய்யும் என்று பஞ்சாங்கத்தில் கணித்து எழுதப்பட்டுள்ளது.

Tags :
Almanac warningHeavy stormகடுமையான புயல் வீசும்கார்த்திகை மாத பஞ்சாங்கம்தமிழ்நாடு
Advertisement
Next Article