முன்பின் தெரியாத நபருடன் உடலுறவு கொள்வது போல் கனவு வந்தால்... என்ன அர்த்தம்..?
பொதுவாக தூங்கும் போது நாம் வெவ்வேறு விஷயங்களை நம் கனவில் காண்கிறோம். சிலர் தாங்கள் காணும் கனவை நினைவில் வைத்திருப்பார்கள். சிலருக்கு தங்களும் கனவுகள் மறந்து விடும்.
பொதுவாக பலருக்கும் உடலுறவு பற்றிய கனவுகள் வரும். ஆனால், இந்த கனவுகள் உண்மையில் எதைக் குறிக்கின்றன? உடலுறவு தொடர்பான கனவுகள் உண்மையில் ஒருபோதும் உடலுறவை மட்டும் குறிப்பதில்லை. ஆனால் நமது சொந்த ஆளுமையின் சில அம்சங்களைப் பற்றியது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.. உடலுறவு தொடர்பான கனவுகளுக்கு உளவியல் ரீதியாக என்ன அர்த்தம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தெரியாத நபருடன் உடலுறவு: ஒவ்வொரு நபருக்கும் ஒரு அனிமஸ் அல்லது அனிமா இருக்கும் என்ற ஒரு கோட்பாடு உள்ளது. அனிமஸ் என்பது ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கும் ஆண் ஆற்றலையும், அனிமா என்பது ஒவ்வொரு ஆணிடமும் இருக்கும் பெண் ஆற்றலையும் குறிக்கிறது.
உதாரணமாக ஒரு பெண் தெரியாத நபருடன் உடலுறவு கொள்வது போல் கனவு கண்டால், அவர் ஆளுமையின் ஆண்பால் அம்சங்கள் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம்.
முகம் தெரியாத தெரியாத உடலுறவு: முகம் தெரியாத ஒரு நபருடன் உடலுறவு என்பது உங்கள் வாழ்க்கையில் இதுவரை உங்களுக்குத் தெரியாத ஒருவருக்காக நீங்கள் காத்திருப்பதைப் பற்றிய கனவு இல்லை.. இது உங்கள் வாழ்க்கையின் ஒரு விசித்திரமான அம்சத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது பற்றியது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அதிக கட்டுப்பாட்டுடனும் உறுதியுடனும் இருக்க விரும்புகிறீர்கள் என்று அர்த்தம்.
பாலியல் பலாத்காரம் : ஒரு பெண் தன்னை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்வது போல் கனவு கண்டால், அது உங்கள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களில் அவர் கொண்டிருக்கும் சக்தியற்ற உணர்வின் வெளிப்பாடாகும். இது வேலையில் அழுத்தம், குடும்ப சூழலில் இருக்கும் அழுத்தம் அல்லது சமூக அழுத்தம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.. பாலியல் வன்புணர்வு கனவுகள் பயம், அவமானம், விரக்தி மற்றும் சக்தியின்மை ஆகியவற்றைக் குறிக்கிறது.
முன்னாள் காதலருடன் உடலுறவு : உங்களின் முன்னாள் காதலருடன் உடலுறவு கொள்வது போல நீங்கள் கனவு கண்டால், அவர் மீது உங்களுக்கு இன்னும் காதல் இருக்கிறது என்று பலர் தவறாக புரிந்து கொள்கின்றனர். ஆனால் அதன் அர்த்தம் அது இல்லை. பொதுவாகவே அடிக்கடி நமது தற்போதைய உறவை நமது முந்தைய உறவுகளுடன் ஒப்பிட்டு, கடந்த காலத்தில் நமக்கு இருந்ததைத் தேடுகிறோம்.
இத்தகைய கனவுகள் இந்த ஆசையை மட்டுமே குறிக்கின்றன. அதாவது முன்னாள் காதலரிடம் கிடைத்த உணர்வு இந்த உறவில் உங்களுக்கு கிடைக்கவில்லை என்று அர்த்தம். அதனால் மீண்டும் உங்கள் முன்னாள் காதலருடன் சேர வேண்டும் என்று அர்த்தமில்லை.
நீங்கள் தற்போதைய உறவைப் புதுப்பிக்க வேண்டும், அதில் உங்கள் முந்தைய உறவின் குணங்களைச் சேர்க்க வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்..
Read More : மனைவியை வாடகைக்கு எடுக்கும் ஆண்கள்.. அரசு முத்திரை தாளில் ஒப்பந்தம்..!! இந்தியாவில் இப்படி ஒரு இடமா..?