குலதெய்வம் கனவில் வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்..? தொடர்ந்து வழிபடாவிட்டால் என்ன நடக்கும்..?
பொதுவாகவே, நாம் இரவு தூங்கும்போது கனவு வருவது இயல்பு தான். அப்படி நமக்கு வரும் கனவுகளில் சிலது ஞாபகம் இருக்கும், சிலது இருக்காது. ஆனால், கனவுகள் நமக்கு ஞாபகம் இல்லாவிட்டாலும், அதன் தாக்கம் கண்டிப்பாக இருக்கும். மேலும், சில சமயங்களில் நம்முடைய கனவுகள் நிஜத்திலும் பிரதிபலிப்பது போல் இருக்கும். நமக்கு வரும் கனவிற்கு பலன்கள் உண்டு. நமக்கு வரும் ஒவ்வொரு கனவும் ஏதோ ஒரு விஷயத்தை நமக்கு உணர்த்தும். ஆம், எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால், கூட அதையும் சில கனவுகள் நமக்கு உணர்த்தும். அந்த வகையில், இந்த கட்டுரையில் நாம் குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
குலதெய்வம் கனவில் வந்தால்...
நாம் நம்முடைய குலதெய்வத்தை எக்காரணம் கொண்டும் மறக்கவே கூடாது. ஏனென்றால், நமக்கு இஷ்ட தெய்வங்கள் பல இருந்தாலும், அவையெல்லாம் நம்முடைய குல தெய்வத்திற்கு அடுத்தது தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே, குலதெய்வத்தையும், குலதெய்வ வழிபாட்டையும் ஒருபோதும் மறக்கக் கூடாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், குலதெய்வம் நம்முடைய கனவில் வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
* உங்கள் குலதெய்வம் உங்கள் கனவில் வந்தால் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கப் போகிறது என்று அர்த்தம். தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். நீங்கள் நினைத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள்.
* ஆனால், குலதெய்வத்தை சரியாக வழிபாடு செய்யவில்லை என்றாலும், உங்கள் கனவில் குலதெய்வம் வரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி, குலதெய்வ கோவில் கனவில் வந்தால், நீங்கள் மனதில் நினைத்த காரியம் நல்லபடியாக முடியும் என்பதை குறிக்கிறது. தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக முடியும்.
* கனவில் குலதெய்வத்தை வழிபடுவது போல் வந்தால் வெளிவட்டாரத்தில் உங்களது மதிப்பும், கௌரவமும் கூடும். உங்கள் கனவில் குலதெய்வம் வந்தால் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
Read More : தூங்கி எழுந்தவுடன் செல்போனில் மூழ்குபவரா நீங்கள்..? உடனே இந்த பழக்கத்தை கைவிடுங்க..!! இல்லைனா என்ன ஆகும் தெரியுமா..?