For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தவறான அக்கவுண்ட் எண்ணிற்கு பணத்தை அனுப்பிட்டீங்களா.! இதை உடனே பண்ணுங்க போதும்.!?

07:18 AM Jan 21, 2024 IST | 1newsnationuser5
தவறான அக்கவுண்ட் எண்ணிற்கு பணத்தை அனுப்பிட்டீங்களா   இதை உடனே பண்ணுங்க போதும்
Advertisement

உலக அளவில் தற்போது ஆன்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கிராம முதல் நகரம் வரை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வளர்ந்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை அதிவேகமாக பெருகிக்கொண்டே வருகிறது. பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகளும் இணையத்தில் கிடைக்கின்றன. இதனை பயன்படுத்தி எளிதாக ஒருவருக்கொருவர் பணத்தினை பரிவர்த்தனை செய்து கொள்ள முடிகிறது.

Advertisement

இதில் அதிக அளவு நன்மைகள் இருந்தாலும், ஒரு சில தவறுகளும் நடக்கத்தான் செய்கிறது. அதாவது ஒருவருடைய எண்ணிற்கு பணத்தை அனுப்பும் போது கவன குறைவாக தவறான எண்ணிற்கு பணத்தை அனுப்பி விடுகின்றனர். இவ்வாறு நடந்தால் என்ன செய்யலாம் என்பது குறித்தும், பணத்தை எப்படி திரும்பி பெறலாம் என்பது குறித்தும் பார்க்கலாம்?

மேலும் ஜி பே (gpay) போன் பே (phone pay) இதுபோன்ற செயல்களின் மூலம் ஒருவர் எண்ணிற்கு பணத்தினை தவறாக அனுப்பி விட்டால் இந்த செயலிலேயே வாடிக்கையாளர் சேவை மையத்தின் நம்பர் இருக்கும். அதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது bhim என்று அழைக்கப்படும் பிரத்தியேகமான வாடிக்கையாளர் சேவை மையத்தின் நம்பரை(18001201740) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

மேலும் www.npci.org.in என்ற இணையதள சேவைக்கு சென்று கேட்கப்படும் தகவல்களை அளித்து புகார் பதிவு செய்யலாம். இவ்வாறு செய்தால் தவறாக மற்றொருவருடைய எண்ணிற்கு அனுப்பப்பட்ட பணம் ஒரு வார காலகட்டத்திற்குள் திருப்பி அளிக்கப்படும் என்று இணையதள வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Tags :
Advertisement