அடேங்கப்பா.! ஒரு வாரம் இனிப்பு சாப்பிடாமல் இருந்தால் நம் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும்.!
இனிப்பு என்பது நம் அனைவருக்கும் விருப்பமான ஒரு சுவையாகும். பெரும்பாலானவர்கள் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவை சாப்பிடுவதை விரும்புவார்கள். எனினும் உணவில் சர்க்கரையை சேர்க்கவில்லை என்றால் நமது உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு வாரம் சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருந்தால் அதனால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் நம் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து காணலாம் .
ஒரு வாரம் சர்க்கரையை நம் உணவில் சேர்க்காமல் இருந்தால் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற நமது உணர்வு கட்டுப்படுத்தப்படும். இனிப்பை சாப்பிட தூண்டும் ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்படுவதால் இனிப்பு பண்டங்களின் மீதான ஆர்வமும் குறையும். ஒரு வாரமாக உணவில் சர்க்கரையை சேர்க்காமல் இருந்தால் அடிக்கடி பசி எடுக்கும் உணர்வு இருக்காது. சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருக்கும்போது நமது உடலில் ஆற்றல் சேமிக்கப்படுகிறது. இதனால் சோர்வு மற்றும் சாப்பிட்ட பின் வரும் உறக்கம் ஆகியவையும் இருக்காது.
ஒரு வாரமாக சர்க்கரை உணவுகளை தவிர்த்து வருவதன் மூலம் உடல் எடை மற்றும் கொழுப்புக்களில் மாற்றம் ஏற்படுவதை நேரடியாக காணலாம். சர்க்கரை எடுத்துக் கொள்வதை நிறுத்துவதன் மூலம் நம் உடலில் சேர்ந்துள்ள நீரின் எடை குறைந்து உடல் மெலிந்து காணப்படும். மேலும் சர்க்கரை டயட்டில் சேர்க்காமல் இருப்பது கெட்ட கொழுப்புக்களின் அளவையும் குறைக்கிறது. சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருப்பதன் மூலம் மனதளவிலும் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கும். சர்க்கரை உணவைத் தவிர்ப்பதால் உடல் சுறுசுறுப்புடன் செயல்படுவதோடு மூளையும் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. ஒருவரின் அறிவாற்றல் அதிகரிப்பதோடு கவனம் சிதறாமலும் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.