மலட்டுத்தன்மை எதனால் ஏற்படுகிறது? இதற்கு மருத்துவ தீர்வு என்ன?
ஒரு குழந்தையை தத்தெடுத்தாலேயே குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அதிக மனஉளைச்சல் இருந்தால் குழந்தை பாக்கியம் இருக்காது என்று சொல்வார்கள் இதுவும் முற்றிலும் பொய்யானவை. இயற்கைக்கு மாறான விஷயங்கள் என்று சொல்லப்படுகிறது. உண்மையிலேயே மலட்டுத்தன்மை எதனால் ஏற்படுகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்தியா மட்டுமின்றி உலகளவில் இன்று மலட்டுத்தன்மை அதிகரித்து காணப்படுகிறது. திருமணமாகி ஒரு வருடம் ஆகியும் ஒரு பெண் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் அதை மலட்டுத்தன்மை என்று கூறுகின்றனர்.
மலட்டுத்தன்மை என்றாலே நம் ஊரில் பெண்களை மட்டுமே குறை சொல்லும் போக்கு உள்ளது. இது பெண்களை சார்ந்த விஷயம் என்று குடும்பத்தில் உள்ளவர்கள் அப்பெண்ணை எள்ளி நகையாடுவார்கள். ஆனால், இது முற்றிலும் தவறான விஷயம். மலட்டுத்தன்மை என்பது ஆண்களுக்கும் உள்ளது. மலட்டுத்தன்மை என்பது 30% ஆண்களாலும் 30% பெண்களாலும் ஏற்படுகிறது. இதில் 30%லிருந்து 40% ஆண், பெண் என இருவராலும் ஏற்படுகிறது.
மலட்டுத்தன்மை ஏற்படக் காரணங்கள் என்ன? பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வராமல் இருப்பது. PCOD பிரச்னை, தைராய்டு, புகைப்பிடித்தல்,உடல் எடை அதிகமாக இருத்தல் போன்ற காரணங்களால் மலட்டுத்தன்மை ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. ஆண்களை பொறுத்தவரை அதிகமாக மதுஅருந்துதல், புகைப்பழக்கம், விந்துணுக்களின்
எண்ணிக்கை குறைவாக இருப்பது, விந்தணுக்களின் வடிவத்தில் வேறுபட்ட மாற்றம் காணப்படுதல். விந்தணுக்கள் வரக்கூடிய குழாயில் அடைப்புகள் இருந்தல் போன்றவை மலட்டுத்தன்மைக்கான காரணமாக கூறப்படுகிறது. மேலும் சிலருக்கு 42 வயதை தாண்டினாலே IVF மருத்துவ முறை மூலம் குழந்தை பெறுவதே கடினம். புகை பழக்கம் உள்ள பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.
மலட்டுத்தன்மை எப்போது அதிகரிக்கும்? பெண்கள் 30 வயதை தாண்டும்போது மலட்டுத்தன்மை வாய்ப்பு அதிகரிக்க தொடங்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்களுக்கு 30 வயதில் இருந்து விந்துணுக்களின் எண்ணிக்கை குறைய தொடங்கும். விந்துணுக்களின் எண்ணிக்கை குறைவுக்கு மிக முக்கிய காரணம் உடல் சூடு என்று சொல்லப்படுகிறது. மேலும் ஆரோக்கியமான உணவு முறையை கையாள வேண்டும். குடிப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்த்தால் மலட்டுத்தன்மை குறைய வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், முற்றிலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்படும் தம்பதியினர், செயற்கை முறையில் அதாவது IVF மருத்துவ முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.