என்னப்பா சொல்றீங்க..? ரூ.200 நோட்டும் செல்லாதா..? திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி..!! உண்மை என்ன..?
ரிசர்வ் வங்கி ரூ.137 கோடி மதிப்புள்ள ரூ.200 நோட்டுகளை மக்களிடம் இருந்து திரும்பப் பெற்றுள்ளது. 500 ரூபாய் நோட்டுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. கடந்த 2016இல் மத்திய அரசு சில ரூபாய் நோட்டுகளை தடை செய்ய முடிவு செய்த பிறகு இந்த நோட்டுகள் முக்கியத்துவம் பெற்றன. சில நாட்களுக்கு முன், ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அதன் பிறகு ரூ.200 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
சுமார் 137 கோடி ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. எனவே, 200 ரூபாய் நோட்டுக்கு ஏன் இந்த நெருக்கடி ஏற்பட்டது என மக்கள் குழப்பத்தில் உள்ளனர். ரிசர்வ் வங்கி 200 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதால், அந்த நோட்டு செல்லாது என்று அர்த்தம் அல்ல. இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. இந்த நோட்டுகள் தேய்ந்து, சேதமடைந்து, சிதைந்ததால் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ரூ.135 கோடி மதிப்புள்ள ரூ.200 நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. இந்த நோட்டுகள் சேதமடைந்தும், கிழிந்தும் உள்ளன. 200 ரூபாய் நோட்டு சந்தைக்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. உண்மையில் 500 ரூபாய் நோட்டுகளே அதிகம் சேதமடைந்துள்ளன. 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு சந்தையில் 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக வங்கி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ரூ.200 நோட்டுகள் சேதமாவது அதிகரித்துள்ளது.
Read More : இணையத்தில் லீக்கான பிக்பாஸ் ஓவியாவின் அந்தரங்க வீடியோ..?? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!