இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்.! மாரடைப்பிற்கான அறிகுறிகள் முன்னதாகவே தோன்றுமா.?
மாரடைப்பு என்பது மனித இறப்புகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. சில காலங்களுக்கு முன்பு வரை 50 வயதிற்கு மேற்பட்டோரை தாக்கி வந்த இந்த இதய நோய் மற்றும் மாரடைப்பு தற்போது 30 முதல் 45 வயதிற்கு உட்பட்டவருக்கும் ஏற்படும் அபாயம் 300 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதற்கு பொதுவாக பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன. மக்களின் மாறி வரும் வாழ்க்கை முறை துரித உணவுகள் மற்றும் உடலுடைய பின்மைய ஆகியவை முக்கிய காரணங்களாக அறியப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் இளம் வயது மாரடைப்பு மரணங்கள் 26 சதவீதத்திற்கு மேல் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன மாரடைப்பு என்பது பொதுவாக திடீரென ஏற்பட்டு மனிதனை நிலைகுலையச் செய்யும் என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையாகவே மாரடைப்பு என்பது அப்படி அல்ல. அதன் அறிகுறிகள் மாரடைப்பு ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவோ அல்லது சில நாட்கள் முன்பாகவோ ஏன் சில மாதங்கள் முன்பாகவோ கூட ஏற்பட்டிருக்கலாம்.
இது தொடர்பாக 50 பெண்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் மாரடைப்பிற்கான அறிகுறிகள் சில பல மாதங்களுக்கு முன்பாகவே அந்தப் பெண்களுக்கு ஏற்பட்டிருப்பது இன்னும் நிரூபணமாகி இருக்கிறது. மாரடைப்பில் பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு தான் வேறுபட்டு அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் பெண்களுக்கு தூக்கமின்மை, சோர்வு, மூச்சுத் திணறல், அஜீரணம், குமட்டல் அதிகப்படியான வியர்வை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டிருக்கிறது.
எனவே இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் பதற்றமடையாமல் உடனடியாக இதய மருத்துவரை சென்று ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள். எல்லா நோய்க்கும் வரும் முன் காப்பதே சிறந்ததாக அமைகிறது. பொதுவாக மனிதன் இதய நோய்களிலிருந்து தங்களை காத்துக் கொள்ள ஆரோக்கியமான வாழ்க்கை முறை நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை கடைப்பிடிப்பது சிறந்த வழிமுறை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.