கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!! - முழு விவரம் இதோ
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய பொதுபட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்வார். பட்ஜெட் தினத்திற்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey), இந்திய பொருளாதாரத்தின் நிலை குறித்த விரிவான தகவல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அடுத்த நிதியாண்டிற்கான அரசின் கொள்கை முன்னுரிமைகளையும் பிரதிபலிக்கிறது.
2022 பட்ஜெட் கூட்டத்தொடர் ;
கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் லாக்டவுன் மூலம் ஏற்பட்ட இந்தியப் பொருளாதார பாதிப்புகளைக் களையவும், நாட்டின் பொருளாதாரத்தை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்ற மைய கருத்தை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு பல்வேறு ஊக்கு நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு இந்த பட்ஜெட் அறிக்கையும், பொருளாதார ஆய்வறிக்கையும் வெளியிட்டது. தொற்றுநோயின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் பொருளாதாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கவும் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் இந்த அறிக்கையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
2022-23-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் இடம் பெற்றிருந்த முக்கிய அம்சங்கள்:
- 2023-24 ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றங்களின் பாதையைப் பொறுத்து, ஜிடிபி வளர்ச்சி 6.0 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக இருக்கும்.
- உண்மையான அளவீட்டின் அடிப்படையில் 2024-ம் நிதியாண்டில் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்.
- மார்ச் 2023 முடிவடையும் ஆண்டில் பொருளாதாரம் 7 சதவீதத்தில் (உண்மை அளவுகளில்) வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது முந்தைய நிதியாண்டின் 8.7 சதவீத வளர்ச்சியின் தொடர்ச்சியாகும்
- 2022 ஜனவரி-நவம்பர் காலத்தில் சராசரியாக 30.5 சதவீதத்திற்கும் அதிகமாக மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) துறைக்கான கடன் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
- நிதி ஆண்டு 2023 இன் முதல் எட்டு மாதங்களில் 63.4 சதவிகிதம் அதிகரித்த மத்திய அரசின் மூலதனச் செலவு (CAPEX), வளர்ச்சிக்கு மற்றுமொரு உந்துதலாக இருந்தது.
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது தனியார் நுகர்வு மற்றும் மூலதன உருவாக்கம் ஆகியவற்றால் முதன்மையாக வழிநடத்தப்பட்டது. மேலும், ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் விரைவான நிகரப் பதிவு போன்றவற்றின் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க உதவியதன் விளைவாக நகர்ப்புற வேலையின்மை விகிதம் குறைவதையும் காண முடிந்தது
- 2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலத்தில், நீட்டிக்கப்பட்ட அவசரக் கடன் இணைக்கப்பட்ட உத்தரவாதத் திட்டத்தின் (ECLGS) ஆதரவுடன் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (எம்எஸ்எம்இ) துறைக்கான கடன் வளர்ச்சி, சராசரியாக 30.6 சதவீதத்திற்கும் மேலாக, குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்தது. மத்திய அரசின். MSMEகளின் மீட்சி வேகமாக உள்ளது என்பதை அவர்கள் செலுத்தும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அளவுகளில் இருந்து தெளிவாகத் தென்படுகிறது.
- PM-Kisan மற்றும் PM Garib Kalyan Yojana போன்ற திட்டங்கள் நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவியுள்ளன
- ஏற்றுமதித் தேவை அதிகரிப்பு, நுகர்வு அதிகரிப்பு மற்றும் அரசின் மூலதனச் செலவு ஆகியவை கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடு/உற்பத்தி நடவடிக்கைகளில் மீண்டு வருவதற்குப் பங்களித்தாலும், அவற்றின் வலுவான இருப்புநிலைக் குறிப்பீடுகளும் அவர்களின் செலவினத் திட்டங்களை நிறைவேற்றுவதில் பெரும் பங்கு வகித்தன என்பது உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.
2024ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் இந்த ஆண்டிற்கான மைய கருத்து என்னவாக இருக்கும், என்பது குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
Read more ; கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தேவை..!! – பிரதமர் மோடி வேண்டுகோள்!!