வீட்டில் அரச மரத்தை வளர்க்கலாமா..? என்னென்ன பிரச்சனைகள் வரும்..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
வீட்டில் அரச மரம் இருந்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது பலரது நம்பிக்கை. தெய்வீக சக்தி கொண்டதாக இருக்கும் அரச மரத்தின் நன்மைகளை அளவிட முடியாது. வாஸ்து சாஸ்திரத்தில் அரச மரத்தின் முக்கியத்துவம் என்ன சொல்கிறது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வீட்டில் அரச மரம் இருந்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது பலரது நம்பிக்கை. ஆனால், வீட்டில் அரச மரம் இருப்பது நல்ல பலனை தராது என்று சூழலியலாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த மரத்தின் தெய்வீக சக்தி அபாரமானது. அரச மரம் வளரும் வீட்டில் வறுமை ஆழமாக வேரூன்றியுள்ளது என்று கூறப்படுகிறது
நிதி பிரச்சனைகள்
வீட்டின் கிழக்கு பகுதியில் அரச மரம் இருந்தால், பொருளாதார பிரச்சனைகள் வரலாம். வீட்டின் சுவரில் அரச மரம் வளர்ந்தால், தனிமை வீடு முழுவதையும் ஆட்டிப்படைக்கும் என்று கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் கூட தனிமையால் பாதிக்கப்படலாம். அரச மரத்தின் காற்று மிகவும் நிதானமாக இருக்கும். அதன் நிழல் இல்லறத்தாருக்கு நல்லதல்ல என்கிறார்கள் சாஸ்திர வல்லுநர்கள். இது வீட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது. இதனால், குடும்ப உறுப்பினர்களின் தொழில் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு பிரச்சனை
அரச மரத்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த அரச மரம் குடும்பத்தின் வளர்ச்சியைத் தடுக்கிறது. வீட்டில் அரச மர நிழல் படும்போது குடும்பத்தில் பலவிதமான தடைகள் வரும். ஆனால், இந்த மரம் வீட்டுக்கு வெளியே இருந்தால் அதை வணங்க வேண்டும் என சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. அரச மரத்தை வேரோடு பிடுங்கக் கூடாது என்பது ஐதீகம். அதனால் வீட்டில் வளர்ந்தாலும் வேரோடு பிடுங்கக்கூடாது. ஏனெனில், இந்த மரத்தின் வேரில் பிரம்மா வசிப்பதாக நம்பப்படுகிறது.
இந்த மரத்தை வணங்கி தொட்டியில் எடுத்துச் சென்று கோயிலில் நட்டு விடுமாறு சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த மரத்தை வெட்டுவது முன்னோர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துமாம். மேலும், திருமண வாழ்க்கையில் தடைகள் இருக்கும் எனவும், மேலும் குழந்தைக்கும் பிரச்சனைகள் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த செடி வீட்டில் வளரும்போது 45 நாட்கள் பசும்பாலில் வைத்து வழிபட்டு, பின்னர் கோயிலில் வைத்து வழிபடலாம் என்பது ஐதீகம். ஆனால், அதன் வேர்களை வெட்டாமல் கவனமாக இருக்க வேண்டும்.
Read More : தவெக மாநாட்டிற்கு சிக்கல்..!! விஜய் எடுத்த அதிரடி முடிவு..!! தொண்டர்கள் அதிர்ச்சி..!!