For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை உடனடியாக அதிகரிக்க செய்யும் உணவுகள்.! என்னென்ன தெரியுமா.?!

04:22 PM Jan 07, 2024 IST | 1newsnationuser5
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை உடனடியாக அதிகரிக்க செய்யும் உணவுகள்   என்னென்ன தெரியுமா
Advertisement

ஹீமோகுளோபின் என்பது  உடலுக்கு ஆக்சிஜனை கடத்தும் இரும்பு சத்து கொண்ட நீர்ம கடத்தியாக செயல்படுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும்பொழுது உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

Advertisement

ஹீமோகுளோபின் அளவு என்பது ஆண்களுக்கு உடலில் 13லிருந்து 17.5 கிராம் வரையும், பெண்களுக்கு 12 முதல் 15.5 கிராம் வரை இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றன. இந்த அளவு உடலில் குறைந்தால் அவற்றை உணவின் மூலம் எளிதாக சரி படுத்திக் கொள்ளலாம்.

1. முதலில் மாதுளம் பழம், பேரிச்சம் பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யலாம்.

2. பீட்ரூட், கேரட், ஆப்பிள் மூன்றையும் ஒன்றாக அரைத்து ஜூஸ் எடுத்து குடித்து வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிப்பதோடு, பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை மற்றும் தைராய்டு பிரச்சனைகளையும் இது சரி செய்யும்.

3. ஆட்டு ஈரல் எனப்படும் சுவரொட்டியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யலாம்.

இவ்வாறு நம் அன்றாட உணவு பழக்க வழக்கங்களில் ஒரு சிலவற்றை மாற்றிக் கொள்வதன் மூலம் பல சத்துக்களை பெற்று நோயற்ற வாழ்வை வாழலாம்.

Tags :
Advertisement