For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமையா.? இந்த நோய் இருப்பவர்கள் மறந்தும் கூட பாதாமை சாப்பிடாதீர்கள்.!?

06:26 AM Jan 09, 2024 IST | 1newsnationuser5
பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமையா   இந்த நோய் இருப்பவர்கள் மறந்தும் கூட பாதாமை சாப்பிடாதீர்கள்
Advertisement

பொதுவாக அதிகப்படியான சத்துக்களுக்காகவும்,  ஆரோக்கியமான உடல் நலத்திற்காகவும் பாதாம் பருப்பை சாப்பிட சொல்லி பலர் கூறி இருப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பாதாம் பருப்பு அதிகமாக சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்கள் உடலை பாதிக்கும் என்பது குறித்து தெரியுமா?

Advertisement

செரிமான பிரச்சனை - அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ள பாதாமை தினமும் அளவுக்கு அதிகமாக உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

உடல் எடை அதிகரிப்பு - நம்மில் பலரும் உடல் எடையை குறைப்பதற்கு பாதாமை சாப்பிட்டு வருகிறோம். ஆனால் பாதாமில் அதிகப்படியான கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்துள்ளதால் இதை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.

சிறுநீரக கற்கள் - பாதாம் பருப்பில் அதிகப்படியான ஆக்சலைட் நிறைந்துள்ளதால் இது சிறுநீரக கற்களை உருவாக்கும். மேலும் சிறுநீரக பிரச்சனை மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் பாதாம்  பருப்பு சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

Tags :
Advertisement