For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குழந்தைகளுக்கு அடிக்கடி டயப்பர் போடலாமா.! மருத்துவரின் அறிவுரை என்ன தெரியுமா.?!

07:54 AM Jan 24, 2024 IST | 1newsnationuser5
குழந்தைகளுக்கு அடிக்கடி டயப்பர் போடலாமா   மருத்துவரின் அறிவுரை என்ன தெரியுமா
Advertisement

தற்போதுள்ள காலகட்டத்தில் தாய்மார்கள் தங்கள் குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் இருந்து குறிப்பிட்ட வயது வரை டயப்பர் போடுவதை பழக்கமாக வைத்துள்ளனர். இது தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் சௌகரியமாக இருக்கும் என்றாலும் டயபர் நீண்ட நேரம் போடுவதால் குழந்தைகளுக்கு புண்கள், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இது குறித்து மருத்துவர்களின் அறிவுரையும், டயப்பர் எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என்பதை குறித்தும் பார்க்கலாம்.

Advertisement

குழந்தைகளின் படுக்கை ஈரமாகாமல் இருப்பதற்காகவும், இரவு நேரங்களில் குழந்தையின் தூக்கம் கெடாமல் இருப்பதற்காகவும் அடிக்கடி டயப்பர் போடுகிறார்கள். ஆனால் மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஈரமான டயப்பரை குழந்தைகளுக்கு போடக்கூடாது. இது கெட்ட பாக்டீரியா மற்றும் வைரஸ்களை உருவாக்கி சிறுநீர் பாதை தொற்று, ரேசஸ் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

மேலும் அடிக்கடி டயப்பர் மாற்றுவதன் மூலமும், டயப்பர் அணிவிப்பதற்கு முன்பாக கற்றாழை கலந்த ரேசஸ் கிரீம்களை உபயோகிப்பதன் மூலமாகவும் இந்த நோய் தொற்றை தடுக்கலாம். மேலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட டயப்பர்களை உபயோகப்படுத்துவதற்கு பதில் காட்டன் துணி டயப்பர்கள்  தற்போது கிடைக்கின்றன. அவற்றை உபயோகப்படுத்தி விட்டு துவைத்து வெயிலில் உலர வைத்து மீண்டும் உபயோகப்படுத்தலாம்.

இதனால் சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படாமல் இருக்கும். மேலும் ஆண் குழந்தைகளை ஒப்பீடு செய்யும்போது பெண் குழந்தைகளுக்கு ஆசனவாய் வழியாக நோய் கிருமிகள் குடல் பகுதியில் தாக்கி நோய்களை ஏற்படுத்துகிறது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் செயற்கையாக கடைகளில் விற்கும் டயபர்களை மூன்று மணி நேரத்திற்கு மேலாக உபயோகப்படுத்தக் கூடாது. மலம் கழித்து விட்டால் உடனடியாக டயப்பரை மாற்றி விட்டு சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் காட்டன் டயப்பர்களை மட்டுமே உபயோகப்படுத்தலாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement