For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குளிர் காலங்களில் தினமும் ஆரஞ்சு பழங்கள் எடுத்துக் கொள்வது நல்லதா.? இதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன.?

05:56 AM Nov 29, 2023 IST | 1newsnationuser4
குளிர் காலங்களில் தினமும் ஆரஞ்சு பழங்கள் எடுத்துக் கொள்வது நல்லதா   இதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன
Advertisement

ஆரஞ்சு பழம் குளிர் காலத்தில் கிடைக்கக்கூடிய ஒரு சீசன் பழமாகும். வைட்டமின் சி நிறைந்திருக்கும் இந்த பழம் நம் உடலின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வைக்கிறது. ஆரஞ்சு பழம் இனிப்பு புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இதனால் ஆரஞ்சு பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் குளிர் காலத்தில் சளி மற்றும் இருமல் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பலரும் கருதுகின்றனர். குளிர்காலத்தில் ஆரஞ்சு பழங்களை தினமும் சாப்பிடலாமா.? அவற்றை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன.? என்று பார்ப்போம்.

Advertisement

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நார்ச்சத்து மற்றும் பலவிதமான மினரல்கள் நிறைந்து இருக்கின்றன. இவற்றில் நீர்ச்சத்தும் அதிகமாக இருக்கிறது. ஆரஞ்சு பழங்களை தினமும் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு இவற்றில் இருக்கக்கூடிய கலோஜன்கள் சரும பொலிவிற்கும் உதவுகின்றன. இவற்றில் இருக்கக்கூடிய ஆக்சிஜனேற்ற மூலக்கூறுகள் உடலை பல்வேறு விதமான அழுத்தங்களிலிருந்து காக்க உதவுகிறது.

ஆரஞ்சு பழங்களை அதிகம் சாப்பிடுவதால் அவற்றில் இருக்கக்கூடிய வைட்டமின் சி உடலுக்கு தேவையான அளவு கிடைக்கிறது இதன் காரணமாக குளிர்காலங்களில் ஏற்படும் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து உடலை காத்துக் கொள்ள உதவுகிறது. ஆரஞ்சு பழம் நார்ச்சத்து அதிகமாகக் கொண்டது. இதனால் வயிற்றில் எப்பொழுதும் நிரம்பிய நிலையில் வைத்திருக்கும். தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வரும்போது உடல் எடை கட்டுக்குள் இருக்கும். மேலும் இவற்றில் இருக்கக்கூடிய சக்தி அமிலம் கெட்ட கொழுப்புகள் உருவாவதை தடுக்கிறது.

ஆரஞ்சு பழங்களில் நீர் சத்து அதிகமாக இருக்கிறது. இவை நம் உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருப்பதற்கு உதவுகிறது. குளிர்காலங்களில் நாம் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. இதனால் ஏற்படும் நீரிழப்பை ஆரஞ்சு பழங்கள் சாப்பிடுவதன் மூலம் சரி செய்து கொள்ள முடியும். மேலும் ஆரஞ்சு பழங்களில் இருக்கக்கூடிய நீர் சத்து குளிர்காலத்தில் முகத்தில் ஏற்படும் சரும வளர்ச்சி போன்றவற்றையும் தடுக்கிறது. தினமும் ஆரஞ்சு பழங்கள் சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான நன்மைகள் கிடைக்கின்றன.

Tags :
Advertisement