For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செம ட்விஸ்ட்..!! துணை பிரதமராகிறார் சந்திரபாபு நாயுடு..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Senior Congress leader Peter Alphonse has insisted that Telugu Desam Party chief Chandrababu Naidu should be sworn in as Deputy Prime Minister.
11:09 AM Jun 05, 2024 IST | Chella
செம ட்விஸ்ட்     துணை பிரதமராகிறார் சந்திரபாபு நாயுடு    வெளியான பரபரப்பு தகவல்
Advertisement

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு துணை பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

மக்களவைத் தேர்தல் முடிவுகள் பெரும் ஆச்சரியத்தை சில கட்சிகளுக்கும், அதிர்ச்சியை சில கட்சியினருக்கும் தந்துள்ளன. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக முடிவுகள் வெளிவந்துள்ளன. 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டது. ஆனால், பாஜகவுக்கு தற்போது தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை.

இந்நிலையில் தான், பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கலந்து கொள்ளும் எனத் தெரிகிறது. 400 இடங்களை வெல்வோம் என்ற கோஷத்துடன் பிரச்சாரத்தை தொடங்கிய பாஜகவுக்கு மக்களவை தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளன. தனி மெஜாரிட்டி பெற முடியாமல் கூட்டணி ஆட்சியையே பாஜக இந்த முறை அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு துணை பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் வலியுறுத்தியுள்ளார். பாஜக கூட்டணிக்கு தெலுங்கு தேசம் ஆதரவளித்தால், துணை பிரதமர் பதவியை கேட்டுப் பெற்று தென்னிந்தியாவின் உரிமைகளை நாயுடு பாதுகாத்திட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

Read More : பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் மோடி..!! மொத்த அமைச்சரவையும் கலைப்பு..!!

Tags :
Advertisement