For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

என்ன கொடுமை இது!… குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பம் ஆக்கினால் ரூ.13 லட்சம்!… பீகாரில் பகீர்!

10:35 AM Jan 02, 2024 IST | 1newsnationuser3
என்ன கொடுமை இது … குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பம் ஆக்கினால் ரூ 13 லட்சம் … பீகாரில் பகீர்
Advertisement

பீகாரில் குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பம் ஆக்கினால் ரூ.13 லட்சம் தரப்படும் என்று விளம்பரம் செய்து கும்பல் ஒன்று மோசடியில் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் அண்மைக்காலமாக ஒரே மாதிரியான புகார்கள் பதிவாகி வந்தன. அதாவது பல ஆண்கள், ஒரு மோசடி கும்பல் தங்களை ஏமாற்றி பல ஆயிரம் ரூபாயை திருடிவிட்டது என புகார் செய்து வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகின.

அண்மைக்காலமாக ஒரு விளம்பரத்தை அந்த கும்பல் வெளியிட்டு வந்திருக்கிறது. அந்த விளம்பரத்தில், "இதோ அதிர்ஷ்டம் உங்களை அழைக்கிறது.. குழந்தை பேறு இல்லாத பெண்களை உங்களால் கர்ப்பம் தரிக்க செய்ய முடியுமா? அப்படி செய்தால் உங்களுக்கு ரூ.13 லட்சம் ரொக்கப் பரிசு தரப்படும். ஒருவேளை அப்படி அவர்கள் கர்ப்பம் தரிக்காவிட்டாலும் ரூ.5 லட்சம் தரப்படும்" என்று அந்த விளம்பரத்தில் வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 'அகில இந்திய கர்ப்பம் தரித்தல் தொழில் நிறுவனம்' (All India Pregnant Job Agency) என்ற பெயரில் இந்த விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.

அப்படி தொடர்பு கொள்பவர்களுக்கு உடனடியாக 10 அழகிய பெண்களின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்படும். பின்னர் அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்குமாறு அவர்கள் கூறுவார்கள். அப்படி தேர்ந்தெடுத்தவுடன், ரூ. 2000 முதல் ரூ.20000 வரை அனுப்பி பதிவு செய்ய வேண்டும் என அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கூறுவார்கள். அவர்கள் உடலுறவு கொள்ள போகும் பெண்களின் அழகினை பொறுத்து இந்த தொகை நிர்ணயிக்கப்படும்.

பெண்களின் போட்டோவையும், கார்ப்பரேட் கம்பேனியில் இருந்து பேசுவது போன்ற தொனியில் இந்த கும்பல் பேசுவதையும் பார்த்து பல ஆண்கள் ஏமாந்து அவர்கள் கேட்ட பணத்தை அனுப்பி விடுவார்கள். ஆனால் அதற்கு பிறகு அவர்களை அழைத்தால் அந்த நம்பர் சுவிட்ச் ஆப் என்று வரும். இப்படி ஏராளமான நபர்களை ஏமாற்றி அந்த கும்பல் இதுவரை பல கோடி ரூபாயை மோசடி செய்திருக்கிறது.

கடந்த ஒரு மாதமாக இந்த கும்பலை பிடிக்க 10-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீஸார் அலைந்து திரிந்துள்ளனர். இந்நிலையில், இன்று அந்த மோசடி கும்பலைச் சேர்ந்த 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால், தப்பியோடிய மோசடி கும்பலின் தலைவனான முன்னா குமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Tags :
Advertisement