அதிகரித்து வரும் மலச்சிக்கல் பிரச்சினை.. இதுதான் காரணமா.?! ஆய்வுகளில் அதிர்ச்சி.!
சமீப காலமாக பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை காண முடிகிறது. பழங்காலத்தில் வயதானவர்களுக்கு மட்டும்தான் இந்த மலச்சிக்கல் பிரச்சனை அதிகப்படியாக பாதிக்கும். வயது மூப்பு காரணமாக அவர்களது செரிமான மண்டலம் சரிவர இயங்காமல் போவது தான் இதற்கு காரணம். ஆனால் தற்போது இளம் தலைமுறையினர் கூட மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர். அவர்கள் சாப்பிடக்கூடிய ஜங்க் உணவுகள் மலச்சிக்கல் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்றாலும் கூட சமீபத்திய ஆய்வுகளில் வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவது தான் அதிகப்படியானவருக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கு காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்தியன் டைப் கழிப்பறைகளை பயன்படுத்துவது சிறந்தது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இந்திய வகை கழிப்பறையை பயன்படுத்தும் போது நமது உடல் 35° கோணத்தில் இருக்கும். குடல் பகுதி நேராக இருக்கும். எனவே, உடலில் இருந்து மலம் முழுமையாக வெளியேற இது உதவி செய்யும். இந்தியன் வகை கழிப்பறையில் அமரும்போது ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் கை கால்களுக்கு அது ஒரு சிறந்த உடற்பயிற்சியை தருகிறது.
மேலும் இது வயிறு மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இவ்வாறு உட்காருவது ஆசனம் என யோகாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் நாம் வெஸ்டர்ன் டாய்லெட்டுகளை பயன்படுத்தும் போது நமது உடல் 90° கோணத்தில் இருக்கின்றது. அன்றாடம் நாம் சாதாரணமாக சேர்களில் உட்காரக்கூடிய நிலை என்பதால், நமது மூளை சாதாரணமாக அமர்ந்திருக்கும் நிலையிலேயே இருப்பதாக உணர்ந்து மலத்தை வெளியேற்றாது. மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வே நமக்கு ஏற்படுவது குறைந்து விடுகிறது. இதன் காரணமாக தான் வெஸ்டர்ன் டாய்லெட்டுகள் மலச்சிக்கல் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.