முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழ்நாடு, கர்நாடகா தொடர்ந்து மே.வங்க சட்டசபைலும் நீட் தேர்வு-க்கு எதிராக தனி தீர்மானம்!!

West Bengal Scraps NEET, To Introduce New Medical Entrance Exam
04:14 PM Jul 24, 2024 IST | Mari Thangam
Advertisement

மேற்கு வங்க மாநிலத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) ரத்து செய்ய வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை தமிழ்நாடு அரசு தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு சட்டசபையில் தொடர்ச்சியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனாலும் இந்த தீர்மானங்களை கிடப்பில்தான் மத்திய அரசு போட்டு வைத்துள்ளது.

இந்த ஆண்டு, நாடு முழுவதும் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவுகள் பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது. நீட் தேர்வில் வினாத்தாள்கள் கசிய விடப்பட்டதாகவும், முறைகேடாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது.

இதனையடுத்து நாடு முழுவதுமே நீட் தேர்வுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்தன. டெல்லியில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. நீட் முறைகேடுகளை முன்வைத்து நாடாளுமன்றத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் முடக்கின. தமிழ்நாடு மட்டுமின்றி, மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்க மாநிலங்களும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரின. தொடர்ந்து கர்நாடகா சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தற்போது மேற்கு வங்க மாநில சட்டசபையிலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் மேற்கு வங்க மாநில அரசே நடத்திய பொது நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் எனவும் மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலியுறுத்தி உள்ளது.

மருத்துவப் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு புதிய நுழைவுத் தேர்வை மாநில அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த முடிவு மாநில மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதையும், NEET இன் மையப்படுத்தப்பட்ட வடிவம் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Read more ; தோனி விவசாயம் செய்வது இதற்கு தானா..? வருமான வரியில் இருந்து தப்பிக்க மாஸ்டர் பிளான்..!!

Tags :
Karnatakaneettn governmentwest bengal
Advertisement
Next Article