For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BREAKING NEWS | மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை.!

05:00 PM Jan 24, 2024 IST | 1newsnationuser7
breaking news   மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்து   மருத்துவமனையில் சிகிச்சை
Advertisement

மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்துக்குள்ளானதாக பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது. தலைநகர் கொல்கத்தாவிற்கு புறப்பட்டு சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

இந்தியாவின் ஆளுமை மிக்க தலைவர்களில் ஒருவராக இருப்பவர் மம்தா பானர்ஜி. இவர் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகிப்பதோடு ரயில்வே துறையின் முன்னாள் மந்திரியாகவும் பதவி வகித்தவர். தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இன்று காலை தலைநகர் கொல்கத்தாவிற்கு புறப்பட்டு சென்றபோது இவரது கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

இந்த விபத்தில் மம்தா பானர்ஜிக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் பாதுகாப்பாக கொல்கத்தா திரும்பியிருக்கிறார் மம்தா பானர்ஜி. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement