For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

களைகட்டும் டாஸ்மாக் கடை விற்பனை..!! நாளை மீண்டும் லீவு..!! இன்றே குவிந்த மதுப்பிரியர்கள்..!!

04:08 PM Apr 20, 2024 IST | Chella
களைகட்டும் டாஸ்மாக் கடை விற்பனை     நாளை மீண்டும் லீவு     இன்றே குவிந்த மதுப்பிரியர்கள்
Advertisement

நாளைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தமிழ்நாட்டில் மக்களவைத் தோ்தல் நடைபெறுவதால், தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நாளில் இருந்து, வாக்குப்பதிவு நடைபெறும் 19ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அத்துடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. அதன்படியே, கடந்த 17ஆம் தேதி முதல், நேற்று 19ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்த பாா்கள் அனைத்தும் மூடப்பட்டன.

3 நாட்கள் தொடர் விடுமுறை என்றதுமே, குடிமகன்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. உடனே கடந்த 16ஆம் தேதி, டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுக்க துவங்கினார்கள். 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கினார்கள். இதனால் அன்றைய டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. பாட்டில்களை வாங்கி அங்கேயே வயிறு முட்ட குடித்துவிட்டு, தங்களது தேவைக்காக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். அந்த 16ஆம் தேதி, ஒரே நாளில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ. 400 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.

தினமும் மது விற்பனை ரூ.150 கோடி அளவுக்கு இருக்குமாம்.. ஆனால், 16ஆம் தேதி டபுள் மடங்கு எகிறிவிட்டது. பொங்கல், தீபாவளி பண்டிகை நாட்களில் கூட ரூ.100 கோடிகளுக்கு மட்டுமே வசூலாகும் நிலையில், இப்படி ஒரே அடியாக 400 கோடி ரூபாய் வசூல் வந்தது கிடையாதாம். இப்போது 3 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், குடிமகன்களுக்கு இன்னொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால், மஹாவீா் ஜெயந்தி தினமான ஞாயிற்றுக்கிழமை அதாவது நாளை ஏப்ரல் 21ஆம் தேதியும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மது பாட்டில்களை அதிகமாக வாங்கிக்கொண்டு, இந்த மதுபாட்டில்களை திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு விற்கவும் வாய்ப்புள்ளது. அதனால்தான், மது விற்பனையை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினமும் வழக்கமான விற்பனையை விட கூடுதலாக மது விற்பனை நடக்கும் என்கிறார்கள். எனினும், காலையிலேயே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்து விற்பனை களை கட்டிக்கொண்டிருக்கிறதாம்.

Read More : ’மூளை அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதம் தான் ஆச்சு’..!! அதற்குள் சத்குரு செய்த வேலைய பாத்தீங்களா..?

Advertisement