For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

களைகட்டும் மதுரை ஜல்லிக்கட்டு!… இன்று முதல் முன்பதிவு!… கட்டுப்பாடுகள் இதோ!

07:44 AM Jan 10, 2024 IST | 1newsnationuser3
களைகட்டும் மதுரை ஜல்லிக்கட்டு … இன்று முதல் முன்பதிவு … கட்டுப்பாடுகள் இதோ
Advertisement

மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்றுமுதல் தொடங்கவுள்ளது.

Advertisement

ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. அந்த வகையில், இந்தாண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு ஆன்லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள், காளைகள் முன்பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

அந்தவகையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுகள் மற்றும் மாடுபிடிவீரர்களுக்கான முன்பதிவு இன்றுமுதல் தொடங்கவுள்ளது. madurai.nic.in என்ற இணையத்தளத்தில் காளை உரிமையாளருக்கும், மாடு பிடி வீரர்களுக்குகென தனித்தனியாக உள்ள பிரிவுகளில் இன்று மதியம் 12 மணி முதல் ஜன.11-ம் தேதி அன்று மதியம் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாட்டிற்கு தகுதி சான்றிதழ் பெற்று, வேறு நபரின் ஆதார் மூலம் முன்பதிவு செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு ஊரில் விளையாடும் மாடும், வீரர்களும் வேறு ஊர்களில் போட்டியிட அனுமதி இல்லை. முறைகேடுகளை தவிர்க்க QR Code இணைப்புடன் டோக்கன் வழங்கப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, ஆன்லைன் மூலமே டோக்கன் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோசடிகளை கண்டுபிடிக்க ஏதுவாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சாதி பெயரை குறிப்பிட்டு காளைகளை அவிழ்க்க கூடாது. காளைகளுக்கு கொம்புகளில் ரப்பர் குப்பி பொறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் சார்பில் குப்பி பொறுத்துவதற்கு கூறியுள்ள நிலையில் நல வாரிய உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வார்கள் எனவும், எனவே அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி உள்ளிட்ட போட்டிகளில் காளைகளுக்கு கொம்புகளில் ரப்பர் குப்பி பொறுத்த கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Tags :
Advertisement