முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

களைகட்டிய அம்பானி வீட்டு கல்யாணம்..!! படையெடுத்த பிரபலங்கள்..!! அட இவரு கூடவா..?

The Anand Ambani - Radhika Merchant Sangeet, featuring many leading Bollywood actors and celebrities, is now out in videos and photos.
12:33 PM Jul 06, 2024 IST | Chella
Advertisement

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் சங்கீத் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட முன்னணி பாலிவுட் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்ற காட்சிகள் தற்போது வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் வெளியாகியுள்ளன.

Advertisement

உலகளவில் மிகப்பெரிய கோடீஸ்வரராக திகழும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால், ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிகள் கடந்த மார்ச் மாதம் முதலே களைகட்ட தொடங்கிவிட்டன. அந்த வகையில், நேற்றைய தினம் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலிவுட் படங்கள் தோற்றுப் போகும் அளவுக்கு பிரம்மாண்டமாக நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பிரபல அமெரிக்க பாடகரான ஜஸ்டீன் பீபர் பாடல்களை பாடி அசத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அட்லீ மற்றும் பிரியா அட்லீ ரன்வீர் சிங் அணிவது போல கலர் கலரான உடைகளை அணிந்துக் கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்துள்ளனர். கருப்பு நிற கவர்ச்சி உடையில் ஆலியா பட் தனது கணவர் ரன்பீர் கபூருடன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். தீபிகா படுகோன் சமீபத்தில் கல்கி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், மும்பையில் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் பிரபல தியேட்டர் ஒன்றுக்கு சென்று கல்கி திரைப்படத்தை பார்த்த காட்சிகளும் வெளியாகின. இந்நிலையில், நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சிக்கும் தனது கணவருடன் தீபிகா படுகோன் சென்றார். சல்மான் கான், கரீனா கபூர், சைஃப் அலி கான் என பல பாலிவுட் பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Read More : BREAKING | ”அண்ணனின் பிறந்தநாளன்றே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம்”..!! கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்..!!

Tags :
ambanimarriageஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட்சங்கீத் நிகழ்ச்சி
Advertisement
Next Article