For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அமெரிக்காவில் களைகட்டும் தீபாவளி!. முதல் முறையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அசத்தல்!

Weed Diwali in America! For the first time, it is crazy to declare a holiday for schools!
06:57 AM Oct 31, 2024 IST | Kokila
அமெரிக்காவில் களைகட்டும் தீபாவளி   முதல் முறையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அசத்தல்
Advertisement

New York: தீபாவளியையொட்டி, நியூயார்க் நகரில் முதன்முறையாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (நவம்பர் 1ம்) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தங்கள் வீடுகளில் தீபாவளி கொண்டாடுகிறார்கள். இதே போல் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அக்.28 அன்று அதிபர் பைடன் தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் நியூயார்க் நகரில் முதல்முறையாக தீபாவளியை முன்னிட்டு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள இந்து சமயத் தலைவர்கள் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த அதிகாரிகள் பல ஆண்டுகளாக வைத்த கோரிக்கையை ஏற்று நியூயார்க் மாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தீபாவளியை முன்னிட்டு இன்று விடுமுறை அறிவிப்பு செய்யப்பட்டு இருப்பதாக நியூயார்க் மேயர் எரிக் ஆடமின் அலுவலகத்தில் உள்ள சர்வதேச விவகாரங்களுக்கான துணை ஆணையர் திலிப் சவுகான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திலிப் சவுகான் கூறுகையில், நியூயார்க் மாநகரில் உள்ள பள்ளிகளில் படிக்கும் இந்து குழந்தைகள் பள்ளிக்கு செல்வதா அல்லது பண்டிகை கொண்டாடுவதா என்ற குழப்பத்தில் இருப்பது வாடிக்கை. தற்போது தீபாவளிக்கு அங்கீகரிக்கப்பட்ட விடுமுறையாக இருப்பதால், மாணவர்கள் இனி தீபாவளியைக் கொண்டாடலாம். பள்ளிக்குச் செல்வதை தேர்வு செய்ய வேண்டியதில்லை.

நியூயார்க் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர் 1ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு வாய்ந்தது. நியூயார்க் நகரில் 11 லட்சம் மாணவர்கள் படித்துவருகிறார்கள். நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் இந்த தீபாவளி விடுமுறையை அறிவித்துள்ளார். எனவே, நாங்கள் அனைவரும் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்’ என்றார்.

Readmore: ஜொலிக்கும் அயோத்தி!. 28 லட்சம் தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை!. பக்தர்கள் பரவசம்!

Tags :
Advertisement